பெண்களை விட ஆண்கள் சிங்கிளாக இருப்பதற்கு காரணம் இதுதான்..!!

By Dinesh TGFirst Published Nov 1, 2022, 10:50 AM IST
Highlights

எல்லா நண்பர்கள் வட்டத்திலும், பெண்களை விட ஆண்கள் தான் சிங்கிளாக இருப்பார்கள். அவர்களால் கமிட்மெண்டுக்குள் போகவே முடியாது. அதற்கான பல்வேறு காரணங்களை விரிவாக அலசுகிறது இக்கட்டுரை. 
 

பெண்களை விட சிங்கிளாக இருப்பவர்களில் அதிகம் பேர் ஆண்கள் தான். எல்லா நண்பர்கள் வட்டத்திலும் இப்படிப்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். எதற்காக நான் சிங்கிளாக இருக்கிறேன்? எனக்கு காதலியே கிடைக்கமாட்டாளா? என்பன போன்று கவலையுடன் தங்களுடைய பெண் தோழிகளிடம் புலம்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் எதுவாக இருந்தாலும், தங்களுடைய உணர்வுகளை பெரியளவில் அவர்கள் வெளிக்காட்டமாட்டார்கள். இதனால் பலரும் நம்பிக்கை இழந்து தனிமையில் இருப்பது போன்ற உணர்வுகளுக்கு தள்ளப்படுவார்கள். ஒருசிலருக்கு காதலுக்கான வாய்ப்பு அமைந்தாலும், அதை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். அந்த வகையில் பெண்களை விடவும் ஆண்கள் சிங்கிளாக இருப்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஒழுக்கங்கெட்டவர்

ஆண்களுக்கு ஒழுக்கம் என்பது நடத்தையில் மட்டும் கிடையாது, தன்னுள்ளும் இருப்பது அவசியம். அப்படியற்ற ஆண்களை பெண்கள் பெரிதும் விரும்புவது கிடையாது. தங்களுடைய உடல்நலம், பழக்க வழக்கம், தோற்றம், உணவு முறை உள்ளிட்டவற்றை ஆண்கள் சிறப்பாக வைத்திருப்பது அவசியம். இதுதான் ஆண்களுடைய வாழ்க்கைக்கு முக்கிய அம்சமாக உள்ளன. இவற்றை பின்பற்றத் தவரும் ஆண்கள், வாழ்க்கையில் தங்களுடைய முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் செய்யாதவர் என்று அறியப்படுகிறார். இதை அழகு, அம்சம், பணம் என்று பெண்கள் புரிந்துகொள்ளக்கூடாது. ஆண்களுக்கு என்று சில குண்நலன்கள் உண்டு, அதை பராமரிக்க தெரியாத ஆண்களை சோம்பேறிகள் என்று பெண்கள் புரிந்துகொள்கின்றனர்.

நம்பிக்கையற்றவர்

ஆண் எப்போதும் தன் மீது நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புகின்றனர். தன் மீதும், தன்னுடைய விருப்பத்தின் மீதும் ஆண்கள் நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும் என்பது பெண்களுடைய நிலைபாடாக உள்ளது. அப்படிப்பட்ட ஆணுக்கு சுயமரியாதை இருக்கும், இதுதான் அவனுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்து எடுக்கும். இதனால் அவனுடைய வாழ்க்கையில் வெற்றிகள் குவியும். சுயமரியாதை வளர்த்தெடுக்கும் ஆண், சமூகத்தின் முன்னேற்றம் காண்கிறான். அவன் வளருகையில், அவன் சார்ந்துள்ள குடும்பம் மேலோங்கி வருகிறது. இதன்மூலம் அவனை நம்பி இருக்கும் பெண்ணும் வெற்றி காண்கிறாள்.

லிவ்-இன் உறவில் எல்லைகளை அமைப்பது எப்படி..?

ஊதாரி

பொறுப்பற்ற ஆண்களை பெண்கள் என்றுமே ஏற்பது கிடையாது. நண்பனாகக் கூட கொண்டிருக்க விரும்புவது கிடையாது. தங்களுடைய வீடுகளில் ஊதாரியாக இருக்கும் ஆண்களை, அவன் சார்ந்துள்ள பெண்கள் தைரியமாக நிராகரித்து விடுவதும் உண்டு. இதுபோன்ற குணநலன்களை கொண்ட ஆண்கள், தங்களை பற்றியும் வெளிப்புற தொடர்புகளை பற்றியும் மட்டுமே கவனத்தில் வைத்துக்கொள்வர். இவர்களுக்கு தங்களுடைய குடும்பத்தை முன்னேற்றி கொண்டுவர வேண்டும், நல்ல பழக்கங்களை குழந்தைகளுடன் உருவாக்கிட வேண்டும் என்கிற எந்த எண்ணமும் இருக்காது. ஊர் சுற்றுவது, வெட்டியாக பொழுதைக் கழிப்பது, காசை வீண் அடிப்பது போன்றவற்றில் தான் இவர்களுடைய முழு கவனமும் இருக்கும்.

எடுப்பார் கைப்பிள்ளை

எவ்வளவு தான் படித்திருந்தாலும், நன்றாக சம்பாதிக்க கூடியவராக இருந்தாலும் சொந்த சிந்தனையில்லாமல் இருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவது கிடையாது. இப்படிப்பட்ட ஆண்கள் எல்லாவற்றுக்கும் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள். அவர்களால் தனியாக இயங்க முடியாது. குடும்பம் என்றால் தாய், தந்தையை சார்ந்து இருப்பார்கள். வெளியே வந்துவிட்டால் நண்பர்களை சார்ந்து இருப்பார்கள். இதுபோன்ற குணநலனை கொண்ட ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணும், அவரை வழிநடத்துவது அவசியமாகி விடுகிறது. இதனாலேயே பெண்கள் எடுப்பார் கைப்பிள்ளை குணநலன்களை கொண்ட ஆண்களை பெரிதாக விரும்புவது கிடையாது. இப்படிப்பட்ட ஆண்களை பார்த்தவுடன் கண்டுப்பிடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக நேரம் உறவில் ஈடுபட்டால் ஆபத்தா?

அனுபவங்கள்

தனக்கு ஏற்பட்ட அனுபவங்களால், எதார்த்த வாழ்க்கை நடைமுறைகளை விட்டு ஒதுங்கி இருக்கும் ஆண்கள். குறிப்பாக காதல் தோல்வியைக் கண்ட ஆண்கள், எதிலுமே பற்றுயில்லாதவர்களாக மாறிவிடுவார்கள். ஒருவேளை அவர்களே அந்த துயரத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்று நினைத்தாலும், அது நடக்காது. எனவே, அவர்கள் ஒரு புதிய உறவைப் பெறுவதில் நிறைய சிரமங்களை சந்திப்பார்கள். சினிமாக்களில் இப்படிப்பட்ட ஆண்களை, பெண்கள் துரத்தி துரத்தி காதலிப்பது போல காண்பிப்பார்கள். ஆனால் இப்படியொரு நிலையில் இருக்கும் ஆண்களை கண்டால், நண்பர்களாகி விடுவார்கள். அது காதலாக மாறாது. இப்படிப்பட்ட ஆண்களிடமும் பெண்கள் பெரிதாக நம்பிக்கை வைத்திருப்பது கிடையாது என்று கூறப்படுகிறது
 

click me!