ஒரு லிவ்-இன் உறவு என்பது பெரும்பாலும் உண்மையான திருமணம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு சோதனை ஓட்டம் தான். அதனால் எந்தளவுக்கு நன்மைகள் இருக்கின்றனவோ, அதே அளவுக்கு பிரச்னைகளும் உள்ளன. அந்த வகையில் உங்களுடைய லிவ்-இன் உறவு எப்படி எளிதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவது என்பது தெரிந்துகொள்ளலாம்
திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு ஒத்திகைக்கான நடைமுறையாக பார்க்கப்படும் லிவ்-இன் உறவிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எந்தளவுக்கு லிவ்-இன் உறவு உற்சாகம் தருகிறதோ, அதே அளவுக்கு அதனுள் அச்சுறுத்தல்களும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக நீங்கள் முதன்முறையாக லிவ்-இன் உறவில் இருந்தால், சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுவதை தவிர்க்க முடியாது. ஒருவருடன் இணைந்து வாழ்வதற்கு முயற்சியும் உழைப்பும் தேவைப்படுகிறது. உங்களது துணையின் பழக்கவழக்கங்கள், தனித்தன்மைகள், எந்த பக்கம் தூங்க விரும்புகிறார், அவருடைய கழிப்பறை பராமரிப்பு எப்படி? உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு லிவ்-இன் உறவு என்பது பெரும்பாலும் உண்மையான திருமணம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு சோதனை ஓட்டம் தான். அதனால் எந்தளவுக்கு நன்மைகள் இருக்கின்றனவோ, அதே அளவுக்கு பிரச்னைகளும் உள்ளன. அந்த வகையில் உங்களுடைய லிவ்-இன் உறவு எப்படி எளிதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவது என்பது தெரிந்துகொள்ளலாம்.
நிதி மேலாண்மை
ஒரு சாதாரண குடும்பத்தில் இருக்கக்கூடிய, அனைத்து நிதி சார்ந்த தேவைகளும் லிவ்-இன் உறவில் இருக்கும். இதுவும் ஒரு குடும்பம் போன்றது தான் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால் நிதி சார்ந்த தேவைகள் எழும்போது இருவரும் சேர்ந்து பேசி முடிவு செய்யுங்கள். எல்லாவற்றிலும் 50 சதவீத பங்களிப்பு தர வேண்டுமா? அல்லது எந்தெந்த பொறுப்புகள் யார் வசம்? உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து முடிவு செய்துகொள்ளுங்கள். எல்லாவற்றும் மேலாக ஒவ்வொரு பார்டனரும் மற்றவர் தேவையாக கருதுவதை அறிந்து புரிந்துகொள்வதும் முக்கியம்.
வேலைகளைப் பிரித்தல்
பணத் தேவையை போலவே, வீடு சார்ந்த வேலைகளை தங்களுக்குள் பிரித்துக்கொள்வது குறித்து பார்டனர்கள் முடிவு செய்ய வேண்டும். ஆரம்பத்திலிருந்தே உங்களுடைய வாழ்க்கை சார்ந்த பணிகளின் ஒதுக்கீட்டை அறிந்துகொள்வது அவசியமாகிறது. இதனால் உங்களுடைய எதிர்பார்ப்புகளை எப்படி நிர்வகிக்கலாம்? மற்றும் வரவிருக்கும் விஷயங்களுக்கு எப்படி தயாராக இருக்கலாம்? என்பது குறித்து முடிவு எடுக்க எளிதாக இருக்கும். இதன்மூலம் நீங்கள் எந்த அளவிலான உதவியைப் பெற விரும்புகிறீர்கள் என்பதை கண்டறிந்து செயல்பட முடியும்.
குளிர்காலம் உங்களை நெருங்குகிறது- சரும பராமரிப்பில் கவனம் செலுத்த முக்கிய டிப்ஸ்..!
வசதியைக் கண்டறிதல்
நீங்கள் விரும்பும் நபராக இருந்தாலும், அவருடன் சேர்ந்து வாழ்வது என்பது விசித்திரமானது தான். இணைந்து வாழ்வதில் இருக்கும் சிக்கல்கள், அதற்கான முயற்சிகள் உள்ளிட்டவற்றில் இருவருடைய ஒத்துழைப்பும் பெரிதும் தேவைப்படுகிறது. பார்டனர் தங்களுடைய உறவில், தங்கள் இருவருக்குமான இணக்கத்தை பூர்த்தி செய்யும் இடத்தை உருவாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிச்சயமாக இருவருக்குமிடையில் சமரசம் பரஸ்பரத்துடன் இருக்க வேண்டும். உங்களுக்கு இடையில் எப்போது பிரச்னை ஏற்பட்டாலும், உடனே அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லைகள்
வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விஷயங்கள் தேவைப்படுகின்றன. சிலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீண்ட உரையாடலுடன் புத்துணர்ச்சி பெற விரும்புகிறார்கள், மற்றவர்கள் தங்களைத் தாங்களே செதுக்கிக்கொள்ள விரும்புகின்றனர். பார்டனர்கள் இருவருக்கும் லிவ்-இன்னில் தனியுரிமை உண்டு. அதை இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் பார்டனர்கள் தங்களுக்குள் ஒரு எல்லையை வகுத்துக்கொள்ள வேண்டும். இதனால் தொடக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளை களைய பேருதவியாக இருக்கும். அதனால் உங்கள் இருவருக்குமான தனியுரிமை குறித்து வெளிப்படையாக பேசுங்கள். தானாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
அதிக நேரம் உறவில் ஈடுபட்டால் ஆபத்தா?
சேர்ந்து வாழ்வதன் பொருள்
இந்த படிநிலைகளை நீங்கள் முடிவு செய்த பிறகு, லிவ்-இன் உறவின் பொருளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இந்தியாவில் திருமணத்துக்கு முன்பான ஒத்திகையாக தான் லிவ்-இன் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் உங்களுடைய உறவு முறை சுமூகமாக இருக்கும்பட்சத்தில் திருமணத்தை குறித்து முடிவு செய்யுங்கள். ஒருவேளை ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதை களைய முயற்சி எடுங்கள். லிவ்-இன் உறவில் இருந்தாலும், உங்களுடைய இரண்டு குடும்பத்தினரையும் பழக வையுங்கள். திருமணத்துக்கு பிறகான பிரச்னைகள் ஏற்பட்டால் கூட, இந்த பிணைப்பின் மூலம் உறவுகள் வலுபெறும். எக்காரணத்தை கொண்டும் வீட்டுக்கு தெரியாமல் லிவ்-இன் உறவில் இருக்க வேண்டாம்.