Turmeric: மஞ்சளை அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?

By Dinesh TG  |  First Published Dec 19, 2022, 8:56 PM IST

தினந்தோறும் உணவில் மஞ்சள் பயன்பாடு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், பக்க விளைவுகள் இல்லாத பொருட்கள் ஏதும் கிடையாது என்ற உண்மை மஞ்சளுக்கும் பொருந்தும்.
 


மஞ்சளில் இருக்கும் சுவை இயற்கையானது. இதில் குர்குமின் எனும் பயோஆக்டிவ் தனிமமும் அதிகளவில் உள்ளது. இது தவிர அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் காயங்களை குணப்படுத்துவது என மஞ்சள் ஒரு அற்புத நிவாரணியாக செயல்படுகிறது.

தினந்தோறும் உணவில் மஞ்சள் பயன்பாடு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், பக்க விளைவுகள் இல்லாத பொருட்கள் ஏதும் கிடையாது என்ற உண்மை மஞ்சளுக்கும் பொருந்தும்.

Latest Videos

undefined

மஞ்சள்

அற்புத மூலிகையான மஞ்சள், சரியான முறையில் அல்லது சரியான அளவில் உட்கொள்ளாத சமயத்தில், உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மஞ்சளை அதிகமாக உட்கொள்வதால் உண்டாகும் உடல்நல பாதிப்புகள் நம்மை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

அதிகளவு மஞ்சளால் ஏற்படும் பாதிப்புகள்

  • மஞ்சளை அளவுக்கு அத்தி எடுத்துக் கொண்டால், உடலில் சுரக்கின்ற அமிலங்களின் அளவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • வயிற்று உபாதைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
  • செரிமானப் பிரச்சனைகள் உண்டாகும்.
  • சிறுநீரக நோய் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
  • இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க வாய்ப்புள்ளது.
  • அதிகளவில் மஞ்சளை நாம் உட்கொண்டால், அது கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
  • இரத்தம் உறைவதற்கான மருந்தை உண்பவர்களுக்கு, எதிர்மறையான வேலைகளைச் செய்யலாம்.
  • இரத்தப்போக்கு அதிகரிக்கும், 
  • உடல் வீக்கம் மற்றும் 
  • வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மஞ்சள் எனும் அருமையான மருந்தை தேவையான அளவு உட்கொண்டால் பாதிப்புகளௌ தவிர்த்து, பல நன்மைகளை வழங்குகிறது இந்த மஞ்சள். சரியான அளவில் மஞ்சள் உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்டால், உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, உணவின் ஊட்டச்சத்தையும் அதிகரிக்கிறது.

Anise Milk: பாலுடன் சோம்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ உங்களுக்காக!

தினசரி எவ்வளவு மஞ்சள் உட்கொள்ளலாம்?

தினந்தோறும் 500 முதல் 2,000 மில்லிகிராம் மஞ்சளை உட்கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினந்தோறும் இந்த அளவு மஞ்சளை விட, அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல பக்க விளைவுகள் உண்டாகும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

மஞ்சள் பால்

மஞ்சளை உணவில் மட்டுமின்றி, பாலில் சேர்த்து மஞ்சள் பாலாக குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் மஞ்சள் கலந்த பாலில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி போன்ற பல அத்தியாவசியமான ஊட்டச் சத்துக்கள் காணப்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் மஞ்சள் பால் ஏற்றது அல்ல. ஏனெனில் மஞ்சளை அதிகமாக உட்கொள்ளும் போது ஏற்படும் அதே தீமைகள், மஞ்சளை எந்த வடிவத்தில் உணவாக எடுத்துக் கொண்டாலும் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்

click me!