திருமணத்திற்குப் பிறகு, பெண்களும் ஆண்களும் கூட திடீரென்று குண்டாகத் தொடங்குகிறார்கள். இதற்கு செக்ஸ் தான் காரணம் என்று பெரும்பாலானவர்கள் கூறுகின்றன. திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதற்கு அதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது உள்ளதா?
திருமணத்திற்குப் பிறகு உடல் எடை கூடுவதற்கு உடலுறவுதான் காரணம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்த கருத்து பல ஆண்டுகளாக மக்கள் மனதில் உள்ளது. பெரும்பாலான மக்கள் இதை உண்மை என்று நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா? இது உண்மையாக இருந்தால், உடலுறவை நிறுத்தும்போது உடல் எடை குறைய வேண்டும் அல்லவா? ஆனால் அது அப்படி நடப்பது கிடையாது. அப்படியானால் எது உண்மை? இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? விரிவாக பார்க்கலாம்.
நிபுணர்கள் கருத்து
அதிகப்படியான உடலுறவு உடல் எடையை அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. உங்கள் உறவில் நீங்கள் முற்றிலும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், அப்போது ப்ரோலாக்டின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது ரிலாக்ஸ் ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் அதிகமாக வெளியிடப்பட்டால் எடை கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் உடல் பருமனுக்கு வழக்கமான உடலுறவு காரணமல்ல என்பது தான் உண்மை. உங்கள் வாழ்க்கை முறை, உணவு முறை, அதிகப்படியான ஓய்வு, உடல் உழைப்பின்மை போன்றவை உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள். உடல் எடைக்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது.
சந்தோஷம் வந்தால் தானாக எடை கூடும்
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை உடல் எடையை அதிகரிக்க வழிவகுப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக, திருமணத்திற்குப் பிறகு மக்கள் வழக்கமான உடலுறவு கொள்ளத் தொடங்குவார்கள். பெண்களின் எடை அதிகரிப்பு பொதுவாக திருமணத்திற்குப் பிறகு ஏற்படும். அதன்படி உங்களுடைய திருமண வாழ்க்கை ஆரோக்கியமாக இருப்பதற்கான பக்கவிளைவு தான் உடல் எடை அதிகரிப்பது என்று புரிந்துகொள்ளலாம்.
ஹார்மோன்கள் மாற்றம்
வழக்கமான உடலுறவு காரணமாக, சில பெண்களின் உடலில் நடுப்பகுதி, தொடைகள் பிட்டம் போன்று தடித்துவிடுவதாக பொதுவான கருத்து நிலவுகிறது, இது உண்மையாக இருந்தாலும், அதற்கு உடலுறவு காரணம் அல்ல. உடலுறவுக்குள் நுழைவதால் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றங்கள் தான் இந்த பிரச்னைகள்.
உடலில் நீர் எடையை குறைக்க பயனுள்ள வழிமுறைகள்- இதோ..!!
உடலுறவு உடல் எடையை குறைக்கும்
வழக்கமான உடலுறவு கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், நீங்கள் படுக்கையில் சுறுசுறுப்பாக இருந்தால், அது உடல் எடையை குறைக்க உதவும். உடலுறவு இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் குறையும்.
இங்கிலாந்தின் பெங்களூரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, உடலுறவின் போது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. உதாரணமாக "ஆக்ஸிடாஸின்" காதல் ஹார்மோன்கள் என்று அறியப்படுகிறது. உடலுறவின் போது ஆக்ஸிடாசின் அதிகரிக்கிறது மற்றும் இது கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில், வழக்கமான உடலுறவு பெரும்பாலும் பசி பிரச்சனைகளை ஏற்படுத்தாது மற்றும் எடை அதிகரிப்பதற்கு பதிலாக எடை குறைக்க உதவுகிறது.