அன்றாட சமையலில் காரசாரமான உணவிற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது மிளகாய் தான். வீட்டு சமையலில் மிளகாய்க்கு மிகவும் சிறப்பான தனியிடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய் மற்றும் குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டுள்ளது. இவை அதனதன் காரத்தன்மையால் வேறுபடுகிறது. மிளகாய் நறுமணப் பொருளாகவும் மற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. இருந்தாலும் மிளகாயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால், நம் உடலுக்கு ஆபத்தையே விளைவிக்கிறது.
அதிகளவு மிளகாய்
undefined
சமையலில் மிளகாயை அளவாகப் பயன்படுத்த வேண்டும். தேவையான அளவில், இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு பல விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதுவே, உணவில் மிளகாயின் அளவு அதிகரித்து விட்டால், பல பக்கவிளைவுகள் ஏற்படும். அவ்வகையில் உணவில் அதிகமாக காரத்தை சேர்த்துக் கொள்வதால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றி இங்கே காண்போம்.
Black Rice: புற்றுநோய் வராமல் தடுக்கும் கருப்பு அரிசி: இன்னும் பல அற்புதப் பலன்கள் இதோ!
அதிக காரத்தினால் உண்டாகும் பாதிப்புகள்
- சிவப்பு மிளகாயை அதிகமாக எடுத்துக் கொள்வது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இது தவிர, சிவப்பு மிளகாயை அதிகம் உண்பதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
- மிளகாய்ப் பொடியை அதிகளவில் உட்கொள்வதால் வாய்ப் புண்கள் ஏற்படும். காரத்தால் வாயில் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் வாயில் எரிச்சல் மற்றும் அதன் தொடர்ச்சியாக புண்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
- சிவப்பு மிளகாயை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும். அதே சமயம், அதிக நேரம் காரமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அதிகளவு காரம் உடலில் சேர்ந்தால், அது நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
- சிவப்பு மிளகாய்ப் பொடியை அதிகளவில் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, முன்கூட்டியே பிரசவத்தின் அபாயம் அதிகரிக்கிறது. இது தவிர கர்ப்ப காலங்களில் சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
- சிவப்பு மிளகாய்ப் பொடியை அதிகமாக எடுத்துக் கொள்வதனால், வாயில் மட்டுமின்றி உங்கள் வயிற்றிலும் புண்களை ஏற்படுத்தும்.
- சிவப்பு மிளகாயில் அஃப்லாடாக்சின் எனும் வேதிப் பொருள் காணப்படுவதன் காரணத்தால் வயிறு, கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
- ஆகவே, உணவில் அதிகளவு காரத்தைச் சேர்க்காமல், தேவையான அளவு மட்டும் சேர்ப்பது தான் நல்லது. ஆரோக்கியம் காக்க இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களையும் அளவாகத் தான் பயன்படுத்த வேண்டும்.