பாலில் ஆழி விதைகளை கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்பதிவில் காண்போம்.
அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய முக்கிய உணவு பால். இதில் அதிகளவில் புரதச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. தொடர்ந்து பால் குடித்து வந்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். பாலில் மஞ்சளைக் கலந்து குடித்தால் இன்னும் பல கூடுதல் நன்மைகளையும் நம்மால் பெற முடியும். அதே போல, பாலில் ஆழி விதைகளை கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்பதிவில் காண்போம்.
ஆளி விதைகள்
பொதுவாக கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாக ஆழி விதைகள் இருக்கிறது. இது உடலுக்கு பல வகையில் நன்மையை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக ஆளி விதைகளுடன் பால் சேர்த்து குடித்து வந்தால், பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். ஆளி விதைகள் மற்றும் பால் ஆகிய இரண்டிலும் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், புரதம், வைட்டமின் பி6, டிஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவ்வகையில் இவ்விரண்டையும் எப்படி எடுத்து கொள்ளலாம்? அதனால் கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
எப்படி எடுத்து கொள்வது?
ஒரு டம்ளர் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதனோடு 1 தேக்கரண்டி ஆளி விதைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதன் பின்னர், இந்தப் பாலை வடிகட்டி குடிக்கலாம்.
மேலும், ஆளி விதைகளை பொடி செய்து, வெதுவெதுப்பான பாலில் கலந்தும் குடித்து வரலாம். இந்தப் பாலை இரவில் தூங்குவதற்கு முன்பாக குடிக்கலாம்.
ஆளி விதை + பாலின் நன்மைகள்
உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் ஆளி விதைகளை பாலுடன் கலந்து குடிக்கலாம். ஆளி விதைகள் மற்றும் பால் ஆகிய இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
விடுமுறை ஸ்பெஷல்- சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் செய்து அனைவரும் சாப்பிடலாம்!
பாலில் ஆளி விதைப் பொடியை கலந்து குடிப்பதால், நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவினைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆளி விதைப் பொடியை பாலில் கலந்து குடிப்பதால், இதயத்திற்கு மிகவும் நல்லது. இதன் காரணமாக, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் முற்றிலுமாக குறைகிறது.
ஆளி விதை மற்றும் பால் இவற்றின் கலவையானது, குடலுக்கு நன்மையை அளிக்க வல்லது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமான அமைப்புத் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கு உதவி செய்கிறது.
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், ஆளி விதைகளை பாலில் கலந்து குடிக்கலாம். இது இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிப்பதற்கு, ஆளி விதைகளை பாலுடன் கலந்து அருந்தலாம்.