உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி வைத்து அசத்தலான பாயசம் செய்யலாம் வாங்க !

By Dinesh TGFirst Published Jan 16, 2023, 1:47 PM IST
Highlights


வாருங்கள்! ருசியான தர்பூசணி பாயசத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோடைகாலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் இடங்களில் தர்பூசணி போன்ற பழங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. தர்பூசணியை நாம் பொதுவாக சாலட் , ஜூஸ் போன்றவற்றை தான் அதிக அளவில் சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் தர்பூசணி வைத்து அருமையான பாயசம் செய்ய உள்ளோம். இதன் சுவை தனித்துவமாக இருப்பதால் இதனை சிறு குழந்தைகள் ல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இருக்கும்.

வாருங்கள்! ருசியான தர்பூசணி பாயசத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • தர்பூசணி ஜூஸ் -1/2 கப்
  • ஓட்ஸ் - 1/4 கப்
  • பால் - அரை லிட்டர்
  • சர்க்கரை - தேவையான அளவு
  • முந்திரி பருப்பு- 2 ஸ்பூன்
  • பாதாம் - 2 ஸ்பூன்

    உடல் எடையை குறைக்க உதவும் ஹெல்த்தி "அவகோடா பிரெட் டோஸ்ட் "


செய்முறை:

முதலில் ஒரு மிக்சி ஜாரில் சர்க்கரையை சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று தர்பூசணி பழத்தை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொண்டு ஜூஸ் செய்து கொள்ள வேண்டும். பாதாம் மற்றும் முந்திரி பருப்பினை கைகளால் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸை ஒரு பௌலில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு டீ சாஸ் பான் வைத்து அதில் பாலை ஊற்றி கொதிக்க வைத்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட்டு பாலை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு விலாசமான கடாய்வைத்து அதில கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மாவினை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு அதனை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

 ஓட்ஸ் வெந்த பிறகு அதில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும். கொதிக்க வைத்துள்ள பால் ஊற்றி மீண்டும் கொதிக்க வைத்து தர்பூசணி சாறை ஊற்றி கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து, நெய் உருகிய பின்னர் பாதாம் மற்றும் முந்திரி பருப்பினை சேர்த்து வறுத்துக் கொண்டு பாயசத்தில் ஊற்றி பரிமாறினால் சுவையான தர்பூசணி பாயசம் ரெடி! பாயசம் ரெடி! நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

click me!