
நீண்ட காலமாக சொல்லப்படும் விஷயம் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் நாம் குண்டாகி விடுவோம் என்பது தான். இதைப் பற்றிய குழப்பங்களும் மக்களிடையே இருந்து வருகிறது.
இங்கே உருளைக்கிழங்கு உங்கள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்றால் இதை எண்ணெய்யில் வறுத்தோ பொரித்தோ சாப்பிடக் கூடாது.
ஆமாம்.. நீங்கள் எண்ணெய்யில் பொரித்து உணவுகளை சாப்பிடுமபோது கண்டிப்பாக உங்கள் எடையை அதிகரிக்கிறது. பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் போன்றவை உடல் நலத்திற்கு தீங்கானது.
எனவே, உங்கள் உடல் எடையை குறைக்க உருளைக்கிழங்கை வேக வைத்து சிறந்த முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
அதிகமான கொழுப்பு உடலில் தங்குவதால் இரத்த அழுத்தம், அதிக கொல ஸ்ட்ரால், மூட்டு வலி மற்றும் உடல் எடை போன்றவை ஏற்படுகிறது. அதிகமான கொழுப்பு உடலில் தங்குவதற்கு ஆரோக்கியமற்ற உணவு முறைகள், ஹார்மோன் சமநிலையின்மை, உடற்பயிற்சியின்மை, பாரம்பரியம் போன்றவை காரணமாகும்.
நீங்கள் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால் அதற்கு உருளைக்கிழங்கை இப்படி சாப்பிடுங்கள்...
தேவையான பொருட்கள் :
வேக வைத்த உருளைக்கிழங்கு – 2 யோகார்ட் – 1மீடியம் அளவு கப் உப்பு – 1 டேபிள் ஸ்பூன் இந்த இயற்கையான முறையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.
இதனுடன் உடற்பயிற்சியையும் 45 நிமிடங்கள் மேற்கொண்டு எண்ணெய் உணவுகளை தவிர்த்து வந்தால் விரைவில் உங்கள் உடல் எடை குறைவது சாத்தியமே.