உங்களுக்கு உண்டாகும் உடல் வலிகளை போக்க தூங்கும் நிலைகளை மாற்றி பாருங்கள்...

 
Published : Jun 08, 2018, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
உங்களுக்கு உண்டாகும் உடல் வலிகளை போக்க தூங்கும் நிலைகளை மாற்றி பாருங்கள்...

சுருக்கம்

Change the sleeping levels to get rid of your body pains ...

சிலர் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்றும் கிழக்கு பக்கம்  தலை வைத்து படுப்பதுதான் நல்லது என்றும் கூறுவர். இதற்கு புவியின் காந்த சக்திதான் காரணம்.

ஆம். புவியின் காந்த சக்தியை வைத்து நாம் உறங்கும் நிலைகளுக்கான நன்மை, தீமைகளை அறியலாம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் உறங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். அதில் எது நல்லது, எது கெட்டது என்று இங்கே பார்கக்லாம்.

1... தலையணையை கால் குட்டிக்கு கீழ் வைத்து உறங்கினால் கீழ் முதுகு வலி குறையும்.

2.. கழுத்தை நேராக வைத்து, மல்லாந்து படுத்து வந்தால் முதுகு வலி சரியாகும். மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் கோளாறுகள் குறையும்.

3... கைகள் கொண்டு தலையணையை அணைத்தது போல குப்புறப்படுத்து உறங்குவது தாடை வலி மற்றும் தலை வலி குறைய உதவும்.

4..  கழுத்து வலி, தண்டுவடம் பிரச்சனை உள்ளவர்கள் குப்புறப்படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். இது தண்டுவடத்தின் நேரான தன்மையில் தாக்கம் உண்டாக்கி வலியை அதிகப்படுத்தும்.

5..  இடுப்பு வலி உள்ளவர்கள், கால் முட்டிகளுக்கு இடியே தலையணையை வைத்து உறங்கினால் இடுப்பு வலி குறையும்.

6..  கருவில் இருக்கும் குழந்தையைபோல கால்களை குறுக்கி வைத்துக் கொண்டு உறங்குவது, ஆரோக்கியத்திற்கு நல்ல முறை அல்ல. இது நாள்ப்பட உடல் வலி உண்டாக காரணியாகும்.

7.. ஃபெதர் போன்ற பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் தலையணைகள் கழுத்தின் வளைவுக்கு எதுவாக இருக்கும், இதனால், கழுத்து வலி உண்டாவதை தடுக்க முடியும்.

8.. தோள் வலி உள்ளவர்கள், கால்களுக்கு கீழ் மற்றும் தோள்களுக்கு தலையணை பயன்படுத்தி உறங்கினால், தோள் வலியை குறைக்க முடியும்

PREV
click me!

Recommended Stories

Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!