
தாகத்தை நீர் குடித்து சமாளித்து விடலாம் என்றாலும் உடல் சூடும், குடிக்கும் நீர் வயிற்றை நிரப்புவதால் பசியின்மையும், அதனால் ஏற்படும் சோர்வும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். இதற்கும் நீர்தான் சரியான தீர்வு.
நீரோடு சில மருத்துவ குணம்கொண்ட பொருட்களைச் சேர்க்கும்போது அது பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக மாறுகிறது.
அந்த பொருட்களை தான் இப்போ பார்க்க போகிறோம்...
** பட்டை!
பட்டை இயற்கையான வடிவத்தில் கசப்பாக இருக்கும். பட்டையை அப்படியே உண்டால் உடலை சூடாக்கும். அதுவே பொடியாக்கி நீரில் கொதிக்க வைக்கும்போது குளிரூட்டும் பொருளாக அதே பட்டை மாறிவிடும். இந்த நீரை அருந்தினால் உடம்பில் ஏற்படும் சூடு தணியும். தொண்டை வறட்சி நீங்கும்.
** ஏலக்காய்!
பட்டை மாதிரியே இயற்கையாக சூட்டை கொடுக்கும் உணவுதான் ஏலக்காயும். ஆனால், பொடியாக்கி நீரில் கொதிக்க வைக்கும்போது பட்டை மாதிரியே குளிராகி நம் தாகத்தைத் தணிக்கும். அத்தோடு உடல் சூட்டைத் தணித்து பசியைப் போக்கும்.
** வெட்டிவேர்!
இதையும் பொடி செய்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் உடல் குளிரும். எரிச்சல் குறையும். உடல் பொலிவு பெறும். வாந்தி போன்ற பிரச்னைகள் தீரும்.
** நன்னாரி!
நன்னாரி சர்பத் என்றால் நமக்குத் தெரியும். ஆனால் அந்த சர்பத்தை எந்த நீரில் கலக்குகிறார்களோ, அதை எந்தக் கை கலக்குகிறதோ என்று நமக்குத் தெரியாது. எனவே நன்னாரியை வாங்கி வீட்டு நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் குறையும். காய்ச்சல் வருவது மாதிரி தோன்றும் எண்ணத்தையும் குறைக்கும்.
** லவங்கம்!
இதுவும் நம் உடம்பை குளிரூட்டும். தாகத்தைத் தீர்க்கும். ஜீரணத்துக்கு உதவும். உடல் வலியைப் போக்கும்.