ஆண்களுக்கு தைராய்டு அளவு எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?

By Dinesh TG  |  First Published Feb 2, 2023, 2:23 PM IST

தைராய்டு பிரச்சனைகள் இந்த நாட்களில் பொதுவானவை. பெண்களையே அதிகம் தாக்கும் இந்நோய் ஆண்களையும் விட்டுவைக்கவில்லை. ஆண்களுக்கும் தைராய்டு பிரச்சனை இருப்பதால், அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
 


தைராய்டு சுரப்பி சிறியதாக இருந்தாலும் அதன் செயல்பாடு மிகவும் பெரியது. தைராய்டு சுரப்பி குரல்வளைக்குக் கீழேயும் காலர் எலும்பின் மேலேயும் அமைந்துள்ளது. இது நமது உடலின் செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான ஹார்மோன் ஆகும். இது உடல் வெப்பநிலை, கொழுப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு சுரப்பி உடல் மற்றும் இதய துடிப்பு, சுவாசம், செரிமானம் மற்றும் மூளை வளர்ச்சியில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபகாலமாக தைராய்டு பிரச்சனை சர்வ சாதாரணமாகிவிட்டது. தைராய்டு சுரப்பியில் ஹார்மோன் குறைவாக இருந்தால், அது ஹைப்போ தைராய்டு என்றும், அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால், ஹைப்பர் தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது. எந்த தைராய்டாக இருந்தாலும் அது மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும். தைராய்டு பிரச்சனையின் முதல் அறிகுறிகள் எடை அதிகரிப்பு, சோர்வு மற்றும் தசை பலவீனம். ஆரம்பத்தில் பெண்களிடம் அதிகம் காணப்பட்ட இந்நோய் தற்போது ஆண்களிடமும் காணப்படுகிறது. ஆண்களுக்கு தைராய்டு அளவு எவ்வளவு இருக்க வேண்டும் மற்றும் இருக்கக்கூடாது என்பது பற்றிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

ஆண்களின் TSH அளவு என்னவாக இருக்க வேண்டும் என்று தெரியுமா?

Tap to resize

Latest Videos

TSH இன் இயல்பான நிலை (சப்ளினிகல் ஹைப்போ தைராய்டிசம்) 0.4 mU/L முதல் 4.0 mU/L வரை இருக்க வேண்டும். 18 மற்றும் 50 வயதுக்குட்பட்ட ஆண்களில், TSH அளவுகள் 0.5 - 4.1 mU/L இடையே இருக்க வேண்டும். 51 முதல் 70 வயதுடைய ஆண்களில், TSH அளவுகள் 0.5 முதல் 4.5 mU/L வரை இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில், TSH அளவு 0.4 - 5.2 mU/L ஆக இருக்க வேண்டும்.

எப்படிப்பட்ட தைராய்டு பிரச்னைக்கு வழிவகுக்கும்?

ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு இரண்டும் ஆபத்தானவை. தைராய்டு தூண்டும் ஹார்மோன்களைச் சரிபார்க்க TSH சோதனை செய்யப்படுகிறது. TSH இன் சாதாரண நிலை 0.4 mU/L முதல் 4.0 mU/L வரை இருக்கும். 2.0 ஐ விட அதிகமான TSH அளவு ஹைப்போ தைராய்டாக கருதப்படுகிறது. அதே தைராய்டு அளவு 0.4 mU/L முதல் 4.0 mU/L வரை குறைவாக இருந்தால், அது ஹைப்பர் தைராய்டு ஆகும்.

நினைவாற்றல், புத்திக்கூர்மை- இரண்டையும் மழுங்கடிக்கச் செய்யும் உணவுகள்..!!

T0, T1, T2 என்றால் என்ன?

தைராய்டு அறிக்கைகளில் T1, T2 போன்றவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். இது தைராய்டுக்காக செய்யப்படும் சோதனையாகும். ஒரு ஆணின் உடலில் அதிக தைராய்டு அறிகுறிகள் தோன்றினால், மருத்துவர்கள் T3 பரிசோதனையை நடத்தச் சொல்கிறார்கள். T3 இன் சாதாரண நிலை 100 - 200 ng/dL ஆகும். T3 ஹார்மோன் சோதனைக்காக T3 அல்லது ட்ரையோடோதைரோனைன் சோதிக்கப்படுகிறது. ஆரோக்கியமான உடலில் T3 மற்றும் T4 ஹார்மோன்கள் சரியான அளவில் உள்ளன. இந்த இரண்டு ஹார்மோன்களும் TSH ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன. உடலில் T4 அளவு அதிகரிப்பதால் பதட்டம், எடை இழப்பு, உடல் நடுக்கம் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் தோன்றும். உடலில் T4 அளவை சரிபார்க்க தைராக்ஸின் சோதனை செய்யப்படுகிறது.

தைராய்டு அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

மத்ஸ்யாசனம், உஸ்த்ராசனம், தனுஷாசனம் மற்றும் வஜ்ராசனம் போன்ற யோகாக்கள் தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்த பலனளிக்கும். ஆண்களுக்கு அதிகரித்து வரும் தைராய்டு அளவைக் கட்டுப்படுத்த புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற போதை பழக்கங்களைக் கைவிட வேண்டும். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மெக்னீசியம், அயோடின், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

click me!