நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடக் கூடாத மாவுகள் வகைகள், அதனுடைய பாதிப்புகளை இங்கு காணலாம்.
ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் அவருடைய சிறுநீரகம், கல்லீரல், இதயம், கண் போன்ற உறுப்புகளும் நோயால் பாதிக்கப்படும். மோசமான உணவும், வாழ்க்கை முறையும் நீரிழிவு ஏற்பட முக்கிய காரணங்கள். உடலில் போதுமான செயல்பாடு இல்லாமல் மந்தமாக இருப்பதும் நீரிழிவு வர காரணம். சர்க்கரை நோய் பாதித்தவர்கள் உணவில் அதிகமான கவனம் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்கள் சில உணவுகளை சாப்பிட்ட உடனே அவர்களுடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். அந்த உணவுகளை குறித்து இங்கு காணலாம்.
கோதுமை மாவு
உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் கோதுமை மாவு சப்பாத்தி, கோதுமை தோசை ஆகியவற்றை உண்கிறார்கள். ஆனால் நாம் கடைகளில் வாங்கும் மாவு பதப்படுத்தப்பட்டது. இதில் கோதுமை உமி அகற்றப்பட்டு தான் அரைக்கப்படும். இதனால் அதிலுள்ள நார்ச்சத்து நீங்குகிறது. இப்படி பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. கோதுமை வாங்கி நீங்களே நேரடியாக தயார் செய்யும் கோதுமை மாவு நல்லது. மற்றபடி கடைகளில் வாங்கும் கோதுமை மாவை சர்க்கரை நோயாளிகள் அதிகமாக சாப்பிட வேண்டாம்.
சோள மாவு
மக்காசோளத்தில் புரதச்சத்து உள்ளது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதை. சாப்பிடக்கூடாது. ஏனெனில் சோள ரொட்டிகளில் புரதச்சத்தை விடவும் கார்போஹைட்ரேட் அதிகமாக காணப்படுகிறது. ஆகவே சோள ரொட்டியை உண்பவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
வெள்ளை அரிசி மாவு
சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி மாவு கூட டேஞ்சர் தான். ஆகவே தான் சர்க்கரை நோயாளிகள் அரிசியை அளவாக சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒருநாளில் ஒருமுறை அரிசி உணவை எடுத்து கொள்வது நல்லது. அதுவும் அளவாக மட்டும்!