Smoking in Pregnancy : பெண்களே உஷார்: தெரிஞ்சும் தெரியாமலும் கூட கர்ப்ப காலத்தில் புகை பிடிக்காதீர்..

By Kalai SelviFirst Published May 30, 2023, 12:00 PM IST
Highlights

கர்ப்ப காலத்தில் புகை பிடித்தால் ஏற்படும் மூன்று பக்க விளைவுகளைப்  பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..

புகைபிடிப்பது யாருக்கும் பாதுகாப்பானது அல்ல. ஆனால் கர்ப்ப காலத்தில் நீங்கள் புகைபிடித்தால், அது உங்கள் குழந்தைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஒவ்வொரு சிகரெட்டிலும் தீங்கிழைக்கும் இரசாயனங்கள் வெளியாகிறது. இது குழந்தை மற்றும் தாய் இருவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குழந்தையின் எடையில் ஆபத்து ஏற்படலாம்:

கர்ப்ப காலத்தில் புகைபிடிப்பது குறைந்த எடை மற்றும் குழந்தை இறப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கர்ப்ப காலத்தில், நீங்கள் புகைபிடிக்கவே கூடாது. 

குழந்தையின் பார்க்க மற்றும் கேட்கும் திறன்:

புகைபிடித்தல் உங்கள் குழந்தையின் பார்க்கும் மற்றும் கேட்கும் திறனையும் பறித்துவிடும். உங்கள் குழந்தை முற்றிலும் பாதுகாப்பாக பிறக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், கர்ப்ப காலத்தில் தவறுதலாக கூட புகைபிடிக்காதீர்கள்.

இதையும் படிங்க: பெண்கள் ரெட் ஒயின் குடிப்பது நல்லதா? அதன் நன்மைகள் என்ன?

ஆக்ஸிஜன் பற்றாக்குறை:

புகைபிடித்தல் தாயின் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில், குழந்தைக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் குழந்தை இறப்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே, புகை பிடிக்காதீர்கள். ஆகையால் நீங்கள் கர்ப்பமாக இருந்தால், இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

click me!