அதிகரித்து வரும் டெங்கு: கொசுக்களிடமிருந்து உங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

By Ramya s  |  First Published Nov 6, 2023, 2:42 PM IST

டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, பீகார் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எட்டு டெங்கு இறப்புகளும், 6,000 வைரஸ் பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டெங்கு வைரஸ் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டெங்கு வராமல் இருக்க, சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், அப்போது தான் உங்கள் குழந்தைகள் டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அறிகுறிகளை அடையாளம் காணவும்

டெங்குவின் அறிகுறிகளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது முதல் படி. டெங்குவின் ஆரம்ப அறிகுறிகளில் அதிக காய்ச்சல், வாந்தி, கண்களுக்குப் பின்னால் வலி, பலவீனம் மற்றும் தோலில் சிவப்பு வெடிப்பு ஆகியவை அடங்கும். உங்கள் குழந்தைகளிடம் இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கொசு விரட்டி கிரீம்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன், நல்ல கொசு விரட்டி கிரீம் தடவவும். இந்த கிரீமை குழந்தைகளுக்கான பைகளிலும் அனுப்பவும். பெரிய பிள்ளைகள இந்த கிரீம் தாங்களாகவே பயன்படுத்தலாம். குழந்தைகளின் வசதிக்காக, நீங்கள் அவர்களுக்கு ரோல்-ஆன் கொடுக்கலாம்.

இந்த மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 7 உணவுகள் இதோ..

குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருங்கள்

குழந்தைகள் புல்வெளிகளுக்குச் சென்று விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளியில் எங்கு விளையாட வேண்டும், எங்கு விளையாடக்கூடாது என்று சொல்லுங்கள். தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் புல் போன்றவற்றில் இருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்கச் சொல்லுங்கள். இந்த இடங்களில் தான் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன.

உணவில் மாற்றம்

குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய அந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர், மஞ்சள், இஞ்சி, பூண்டு, கீரை, பாதாம், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முழு ஆடைகள்

குழந்தைகளை அரைக்கால் ஆடைகளை அணியச் செய்யாமல், முழுக் கை உடையணிந்து பள்ளிக்கு அனுப்புங்கள். பாவாடையின் கீழ் அணியலாம். கழுத்து, கை, கால்கள் எங்கு வெளிப்பட்டாலும் கொசு விரட்டி க்ரீமை பயன்படுத்துங்கள்.

click me!