ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் இருமல், சளி தொல்லையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்..!!

தொண்டையில் இருக்கும் சளி, இருமல் போன்ற தொற்று கிருமிகளை 5 நிமிடத்தில் அளிக்க உதவும் வீட்டு வைத்தியம் இங்கே..

cold and cough home remedies in tamil

இருமல் பொதுவானது மற்றும் பாதிப்பில்லாதது என்றாலும், தொடர்ந்து இருமல், குறிப்பாக வறண்ட மற்றும் சளி, காய்ச்சல், சுவாசக் கஷ்டங்கள் அல்லது இரத்தம் தோய்ந்த சளி போன்ற மற்ற அறிகுறிகளுடன் இருக்கும் போது,   மிகவும் தீவிரமான சிக்கல்களைக் குறிக்கலாம்.  எனவே, அதில் கவனம் செலுத்துவது மற்றும் நிலைமைக்கு சிகிச்சையளிப்பது முக்கியம்.  எனவே, சுவாசப்பாதையில் உள்ள தொற்று கிருமிகளை அழிக்கவும், சளி இருமல் காய்ச்சல் சரி செய்யவும் இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும்.

தேவையான பொருட்கள்
மிளகு - 15
கிராம்பு - 7
ஏலக்காய் - 1
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி ஒரு துண்டு
பட்டை சிறிதளவு
தண்ணீர்

Latest Videos

இதையும் படிங்க: இந்த சளி, இருமல் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம்.. மருத்துவர்களுக்கு DCGI அறிவுரை..

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும் பாத்திரம் நன்கு சூடானதும் அதில் மிளகு கிராம்பு, ஏலக்காய் பட்டை இவற்றை  மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். நன்கு வறுபட்ட பின் அதனை ஒரு உரலில் சூடாக இருக்கும் போதே இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

மேலும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களிடம் வெள்ளை இல்லை என்றால் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஒரு துண்டு அளவு இஞ்சியை உரசி எடுத்து கொள்ள வேண்டும். அதனை வெல்லத்துடன் சேர்த்து கொள்ளுங்கள். கூடவே ஒரு ஸ்பூன் அளவுக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதை பாகுபதத்திற்கு வந்தவுடன் நாம் ரெடி பண்ணி வைத்திருந்த அந்த பொடியை சேர்க்க வேண்டும். பின் நன்கு கலந்து விட வேண்டும்.  நன்கு ஆறிய பின் அதனை  சாப்பிடலாம்.

இதனை நீங்கள் தொடர்ந்து 5 நாள் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை மற்றும் இருமல் நிரந்தரமாக நீங்கும். மேலும்தொண்டையில் கிருமிகள் ஏதேனும் இருந்தால் அவை முற்றிலும் அழிந்து விடும். இதன் சுவை காரமாகவும் சற்று இனிப்பாகவும் இருக்கும்.

இதையும் படிங்க: மழைக்காலத்தில் இந்த 5 வகையான தேநீர் அருந்துங்கள்; சளி, இருமல் தொல்லை நீங்கும்..உடல் ஆரோக்கியமாக இருக்கும்!!

இதில் நாம் பயன்படுத்திருக்கும் கிராம்பு தொண்டை கிருமியில் உள்ள தொற்றுகளை அளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இஞ்சி மிளகுக்கு சளிகளை நீக்கக்கூடிய தன்மை இருக்கிறது. அதுபோல் தொடர் இருமல் இருந்து கொண்டே இருந்தால் அதனை நீக்குவதற்கு ஏலக்காய் உதவும். குறிப்பாக சுருங்கி இருக்கும் சுவாச பாதையை விரிவடைய செய்வதற்கு இந்த ரெமடி பயனுள்ளதாக இருக்கும்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image