உடலுறவுக்கு முன்பு இதெல்லாம் சாப்பிட்டீங்களா?.. அப்போ அவ்ளோதான்! - டாக்டர்ஸ் சொல்லும் அட்வைஸ்!

By Ansgar R  |  First Published Jul 23, 2023, 2:39 PM IST

உடலுறவுக்கு முன்பு நீங்கள் சிலவகை உணவுகளை உண்ணும் பொழுது அது உங்களுக்கு மிகப்பெரிய பலன்களை தரும். அதே நேரத்தில் மறந்து போய் நீங்கள் சில உணவுகளை உடலுறவுக்கு முன்பு எடுத்துக் கொண்டால் அவ்வளவுதான், குறட்டை விட்டு தூக்கம் தான் வருமே அன்றி வேறு எதுவும் செய்ய இயலாது.


இதில் முதலில் வருவது காரமான உணவு வகைகள், காரமான உணவு வகைகளை நீங்கள் உண்ணும் பொழுது நிச்சயம் அது உங்கள் உடலுறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றில் அமில மாற்றங்களை ஏற்படுத்தி அஜீரண கோளாறு ஏற்படுத்தும், இது ஒரு நல்ல உடலுறவுக்கு உகந்தது அல்ல.

பூண்டு மற்றும் வெங்காயம், குறிப்பாக இதை பச்சையாக உண்ணும் வழக்கத்தை பல பேர் கொண்டிருப்பார்கள். ஆனால் தங்கள் உடலுறவுக்கு முன்பு இவை இரண்டையும் உண்பதை பெருமளவு தவிர்க்க வேண்டும். இவை கடினமான மனத்தை ஏற்படுத்துவதோடு உடலுறவுக்கு தேவையான வசீகரத்தையும் குறைக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

வீட்டுக்குள் தூய்மையான காற்று வேண்டுமா?.. சிறப்பாக வேலையை செய்யும் 4 செடிகள் - பராமரிப்பதும் சுலபம்!

இரவு உணவு உண்டு முடித்ததும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இனிப்புகள் நம் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவும். இது நமக்கு உண்டாகும் நல்ல உணர்வுகளை குறைக்க வல்லது, உடலுறவின்போது அதிக அளவில் இனிப்புகளை உண்ணாமல் இருப்பது மிக மிக நல்லது.

மது, பலர் தவறாக நினைக்கும் விஷயங்களில் ஒன்றுதான், மது அருந்திவிட்டு உடலுறவு கொண்டால் அது அதிக இன்பத்தை கொடுக்கும் என்பது. உண்மையில் அது தவறு, மது அருந்துவதால் விரைவில் தூக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உடலுறவில் உள்ள உங்கள் ஈடுபாட்டையும் பெரும் அளவு குறைக்கும் வலுவை கொண்டது மது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிப்பதற்கு இதெல்லாம் தான் முக்கிய காரணங்களாம்..

click me!