Coconut shell: தலைமுடியை கருமையாக்கும் தேங்காய் மட்டை: எப்படித் தெரியுமா?

By Dinesh TG  |  First Published Nov 25, 2022, 1:11 PM IST

தேங்காயை சாப்பிட்டு முடித்த பின்னர், அதன் மட்டையை தூக்கி எறிந்து விடுவோம். வயது வித்தியாசம் இன்றி அனைவரும் இதைத் தான் செய்கிறோம். ஆனால், உண்மையிலேயே தேங்காய் மட்டை பல்வேறு நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது.


தென்னை மரத்தை கற்பக விருட்சம் என்று கூறுவது வழக்கம். ஏனென்றால் தென்னை மரத்தினுடைய அனைத்துப் பகுதிகளும் நமக்கு பல்வேறு பலன்களைத் தரக்கூடியவை. அதிலும் தேங்காய் மட்டையின் பலன்கள் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். தேங்காயை சாப்பிட்டு முடித்த பின்னர், அதன் மட்டையை தூக்கி எறிந்து விடுவோம். வயது வித்தியாசம் இன்றி அனைவரும் இதைத் தான் செய்கிறோம். ஆனால், உண்மையிலேயே தேங்காய் மட்டை பல்வேறு நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது.

தேங்காய் மட்டை

Tap to resize

Latest Videos

தேங்காய் மட்டையை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம், பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். பொதுவாக, தேங்காய் மட்டையை குப்பையில் வீசி விடுவோம். அதில் பொதிந்து கிடக்கும் நன்மைகளை நாம் அறிந்து கொண்டால், சிறிதளவு கூட வீணாக்க மாட்டோம். தேங்காய் மட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும்? அதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை காண்போம்.  

தேங்காய் மட்டையின் பயன்கள்

தேங்காய் மட்டையைப் பயன்படுத்தி, காயத்தின் வீக்கத்தை குறைக்க முடியும். தேங்காய் மட்டையினை அரைத்து, மஞ்சள் தூளுடன் கலந்து காயம் இருக்கும் இடத்தில் தடவினால் வீக்கம் குறைந்து விடும்.

Betel leaves: தினமும் 2 வெற்றிலை சாப்பிட்டால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் என்னென்ன?

தேங்காய் மட்டையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பற்களின் மஞ்சள் கறையையும் நீக்க முடியும். இதற்கு, முதலில் தேங்காய் முடியை எரித்து விட்டு, பொடிப் பொடியாக்க வேண்டும். இந்தப் பொடியில் சிறிதளவு சோடா கலந்து, பற்களில் தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.  

தேங்காய் மட்டையை கடாயில் போட்டு சூடேற்ற வேண்டும். பிறகு இதனை அரைத்து விட வேண்டும். இந்தப் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து விட வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தடவி ஏறக்குறைய 1 மணி நேரம் கழித்து அலச வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வந்தால் தலைமுடி கருப்பாக மாறும்.

தேங்காய் மட்டையை அரைத்து, அந்தப் பொடியை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில், தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பிரச்சனை முற்றிலும் குணமாகும். 

click me!