குரங்கு அம்மை நோய் பாதிப்பு, ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரிடம் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே பரவுவதாக WHO தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் யாருக்கு எப்படி வரும் என்பதை இப்பதிவில் காணலாம்.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு 1980ம் ஆண்டுகளில் பல லட்சம் பேரை கொன்று குவித்த சின்ன அம்மை நோயுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த குரங்கு அம்மை நோய் சின்னம்மை வீரியத்தை விட குறைந்தது.
குரங்கு அம்மை எப்படி பரவுகிறது?
நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு எளிதாக பரவுகிறது.
உடல் ரீதியான நேரடி தொடர்பு உடையவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட), உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு அல்லது உடல் காயம் மற்றும் உடல் காயம் உடையவர்களுடன் மறைமுக தொடர்பு, அல்லது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள், கறைபடிந்த உடைகள் மூலமும் குரங்கு அம்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் இது பரவக்கூடும்
குரங்கு அம்மை அறிகுறிகள்
குரங்கு அம்மை நோய் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று -நான்கு வாரங்களில் குணமடைந்து இயல்புநிலைக்கு திரும்பிவிடுவர். தொடக்கத்தில் லேசான காய்ச்சலுடன், உடலில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
தப்பித் தவறியும் இதை செய்யாதீங்க... குரங்கு அம்மை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
உங்களுக்கோ அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய படுக்கை, தலையனை, பெட்சீட், உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி முறைப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்
தொற்று பாதிப்பு உடையவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
கைகளை, சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ அல்லது ஆல்கஹால் கலந்த சேனிடைசர்களை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.
மற்றவர்களுக்கு அல்லது அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவும் அபாயத்தை குறைக்க நோயாளியின் மூக்கு மற்றும் வாயை மறைக்கும் வகையில் முககவசத்தை பயன்படுத்த வேண்டும்.
குரங்கு அம்மை நோயாளியின் தோலில் இருந்து உதிரக்கூடிய சொரியை, தூய்மையான பருத்தி துணி கொண்டு மென்மையாக துடைப்பது அல்லது மறைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்