Cancer: ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்... ஆளி விதையில் கிடைக்கும் தீர்வு!

By maria paniFirst Published Dec 28, 2022, 1:50 PM IST
Highlights

நவீன யுகத்தில் பலரும் நீரிழிவு உள்ளிட்ட பல தொற்றாநோய்களால் அவதிப்பட்டு வருகிறோம். இதில் ஆண்கள் நலனை குறி வைக்கும் புரோஸ்டேட் கோளம் தொடர்பான நோய்களுக்கு ஆழி விதை மருந்தாக பயன்படுகிறது. 

நவீன யுகத்தில் பலரும் நீரிழிவு உள்ளிட்ட பல தொற்றாநோய்களால் அவதிப்பட்டு வருகிறோம். இதில் ஆண்கள் நலனை குறி வைக்கும் புரோஸ்டேட் கோளம் தொடர்பான நோய்களுக்கு ஆழி விதை மருந்தாக பயன்படுகிறது. நாற்பதை கடந்த ஆண்களுக்கு வீட்டு பொறுப்புகள் ஒருபுறம் என்றால், உடல் நல அச்சுறுத்தல்கள் மறுபுறம். மத்தளம் போல இருபக்க தாக்குதலில் அவர்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு சவாலாய் புரோஸ்டேட் கோளம் நோய்கள் உருவெடுத்துள்ளது.இதிலிருந்து தப்ப ஆழி விதை உதவுகிறது. 

புரோஸ்டேட் சுரப்பி? 

ஆண்களின் அடிவயிற்று பகுதியில் மலக்குடலுக்கு முன்பாக அமைந்துள்ள உறுப்புதான் புரோஸ்டேட் சுரப்பி. இந்த உறுப்பு தொடர்பான நோய்கள் 40 முதல் 50 வயதுள்ள ஆண்களை தாக்குகிறது. தீங்கு அல்லாத புரோஸ்டேட் கோள உருப்பெருக்கம், புரோஸ்டேட் கோள கேன்சர் ஆகிய நோய்கள் தான் பெரும்பாலும் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆண்களுக்கு உண்டாகும் இந்த புற்றுநோய் ஆண்களின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 

இதையும் படிங்க; Arthritis: முக்கியமான நேரத்துல கூட மூட்டு வலியா? உடனடியாக குறைக்க எளிய தீர்வுகள் இதோ!

சிறுநீர் மண்டலத்தில் சிக்கல்கள் 

மேலே குறிப்பிட்டுள்ள நோய்களால் விரிவடையும் புரோஸ்டேட் கோளம் சிறுநீர் மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறுநீர் கழிக்கும் போது பிரச்னை ஏற்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, சிறுநீர் கசியும் நிலை அதனால் தொற்று ஏற்படுவது ஆகிய சிக்கல்களை ஆண்கள் சந்திக்கிறார்கள். இந்த பிரச்சனையில் இருந்து மீள ஆளி விதை உதவுகிறது. 

 ஆளி விதையின் அற்புதம் 

லின் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. இந்த விதையிலிருந்து எடுக்கும் எண்ணையை பலர் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். உலகத்திலேயே அதிக நார்ச்சத்து கொண்ட உணவாக கருதப்படும் ஆளி விதை, பழங்காலத்தில் எகிப்து, சீனா ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பல மருத்துவ பயன்கள் பொதிந்து காணப்படுகின்றன. 

இதையும் படிங்க; bollywood superstar: என்ன தான் பண்ணுவாரு? 57 வயசிலும் சல்மான் கான் பிட்டாக இருக்க என்ன காரணம் தெரியுமா

இதிலுள்ள ஓமேகா- 3 கொழுப்பு ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்பு படியாமல் பாதுகாக்கும். பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பு ஏற்ற இறக்கம் காணும்போது அதனை சீராக்க ஆளி விதை உதவும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

புரோஸ்டேட் நோய்க்கு தீர்வு 

ஆளி விதையில் செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ், பெக்டின், லிக்னின் ஆகியவை காணப்படுகின்றன. இதில் உயிர்வளித் தாக்க எதிர்க்காரணிகள் மிகுந்து காணப்படுகிறது. ஆகவே தினமும் ஆளி விதைகள் எடுத்து கொள்ளும்போது புரோஸ்டேட் உள்ளிட்ட பல புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. 

நார்ச்சத்துகள் அதிகம் காணப்படுவதால் மலச்சிக்கல், ரத்தத்தில் கொழுப்பு படிவதை குறைத்தல், நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. ஆளி விதையில் உள்ள லிக்னன் எனும் பொருள் தீங்கு அல்லாத புரோஸ்டேட் கோள உருப்பெருக்கத்தினை ஆபத்தான நிலையை நோக்கி செல்வதை தடுக்கிறது. தீங்கு அல்லாத புரோஸ்டேட் கோள உருப்பெருக்கம் அதிகரிப்பது பின்னாளில் புற்றுநோயாகவும் மாறும் வாய்ப்புள்ளதால் ஆளி விதைகள் எடுத்து கொள்வது நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. 

வெளிநாட்டில் பலத்த ஆதரவு 

இந்தியாவில் அதிகளவில் ஆளி விதை உற்பத்தியானாலும் வெளிநாட்டில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆளி விதைகளில் அதிகமான மருத்துவ குணங்கள் இருந்தாலும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற மருந்துகளோடு ஆளி விதையை பயன்படுத்தும் போது மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. இது உடலில் ஹார்மோன் மாற்றங்களை உருவாக்கும் என்பதால் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. 

எப்படி பயன்படுத்துவது? 

ஆளி விதைகளை நாள்தோறும் 15 முதல் 40 கிராம் வரை எடுத்து கொள்ளலாம். அதிகமான நீருடன் கலந்து உண்ணலாம் அல்லது வெறும் வாணலியில் நல்ல மணம் வரும் வரை வறுத்து உண்ணலாம். துவையல், ஸ்மூத்தி உள்ளிட்ட பல வழி முறைகளில் ஆளி விதைகளை உணவில் சேர்க்கலாம். தொடர்ந்து உண்பதால் பல மருத்துவ பலன்களை அனுபவிக்க முடியும். 

click me!