Cervical cancer: பெண்களே உஷார்: இந்த 6 அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையா இருங்கள்!

Published : Dec 27, 2022, 08:18 PM IST
Cervical cancer: பெண்களே உஷார்: இந்த 6 அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையா இருங்கள்!

சுருக்கம்

கருப்பை நீர்க்கட்டிகளின் அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று உலக அளவில் கர்ப்பப்பை கட்டியில் பாதிப்புடைய பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் அறியாமை காரணமாக பெரும் சிரமத்திற்கும், துயரத்திற்கும் பெண்கள் ஆளாகி வருகின்றனர். உண்மையைச் சொல்வதென்றால், இது பற்றிய விழிப்புணர்வு பெண்கள் எல்லோரிடத்திலும் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும். அவ்வகையில் கருப்பை நீர்க்கட்டிகளின் அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

கருப்பை நீர்க்கட்டியின் அறிகுறிகள்

கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போலவே, கருப்பை நீர்க்கட்டி வந்தாலும் வயிறு கனமான உணர்வைத் தரும். மேலும் இது மலச்சிக்கல் போன்ற உணர்வையும் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ள வரையில், இடுப்பின் ஏதாவதொரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வுகள் தோன்றும். 

சிறுநீர் கழிப்பது மற்றும் மற்ற செயல்பாடுகளில் வேறு எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வானது மட்டும் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால், கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதனை, மருத்துவமனைக்குச் சென்று உறுதி செய்து கொள்வது தான் மிகவும் நல்லது. 

இடுப்புப் பகுதிக்கு கீழே, இடது அல்லது வலது புறத்தில் வலி இருப்பது. இந்தப் பகுதியில் அல்லது வேறு ஏதேனும் ஒரு இடத்தில் திடீரென பாரமாக இருப்பது போல நீங்கள் உணர வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சி செய்யும் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

Ice Cube: ஐஸ்கட்டியின் தீமைகள் தெரிந்த உங்களுக்கு, அதன் நன்மைகள் தெரியுமா?

அடிவயிற்றில் வலி மற்றும் வீக்கம் என்பது, வயிற்றில் வேறு ஏதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்க வாய்ப்புண்டு. வயிற்றுப் பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது உங்களுக்கான எச்சரிக்கை மணி ஆகும்.

கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரியதாக வளரும் போது, அதாவது கருப்பைக்கு பின், மிகச் சரியாக கருப்பை வாய் அருகே நீர்க்கட்டி பெரியதாக வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி இருக்கும். 

உங்களின் இடுப்புப் பகுதியில் அதிகம் இடமில்லாத காரணத்தால், நீர்க்கட்டி வளர்ந்து பெரியதாகும் போது, இடுப்பில் நீர்க்கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து, முதுகு வலி அல்லது கால் வலி உண்டாக வாய்ப்புள்ளது.

மேற்கண்ட ஆறு அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து, பாதிப்பு சிறியதாக இருக்கும் போதே சரி செய்து கொள்ளுங்கள்

PREV
click me!

Recommended Stories

இதயத்தைப் பாதுகாக்கும் '7' முக்கியமான டிப்ஸ்
Peanut Tips : வேர்க்கடலை விரும்பியா? இந்த '6' விஷயங்கள் உங்களுக்குதான்!