கபசுர குடிநீரில் இவ்வளவு நன்மைகளா? ஆனாலும் இவங்களுக்கு மட்டும் கொடுக்காதீங்க!

By maria pani  |  First Published Dec 27, 2022, 4:25 PM IST

கொரோனா தொற்றுக்காலத்தில் கபசுர குடிநீர் தமிழக மக்களுக்கு பெரும் நம்பிக்கையாய் இருந்தது.  இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாக இருந்த கபசுர குடிநீரில் சேர்க்கப்படும் மூலிகைகள் அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம். 


 நிலவேம்பு கசாயத்தில் உள்ள ஓரிரண்டு மூலிகைகள் தவிர, பத்திற்கும் மேற்பட்ட மூலிகைகள் கபசுர குடிநீரில் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் நிலவேம்பு, நீர்முள்ளி, கிராம்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தக் குடிநீரை தயாரித்த 3 மணி நேரத்திற்குள்ளாக அருந்தாவிட்டால் பலனளிக்காமல் போகலாம். 

யாரெல்லாம் கபசுர குடிநீர் அருந்தலாம்? 

Latest Videos

undefined

கபசுர குடிநீர் இயற்கை மூலிகைகளால் உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட,  வயிற்றில் புண் உள்ளவர்கள் உணவிற்குப் பிறகே அருந்த வேண்டும். வயிற்றுப்புண்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் குடிநீரில் உள்ள  திப்பிலி, சுக்கு ஆகியவை வெறும் வலியை ஏற்படுத்தக் கூடும். மற்றபடி, எந்த பக்கவிளைவுகளையும் உண்டாக்காது என்பதால் நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோய் பாதித்தவர்களும் கபசுர குடிநீரை அருந்தலாம். 

கவனமா இருங்க! 

குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மிதமிஞ்சி கொடுக்க வேண்டாம். பதின்பருவத்தை எட்டாத குழந்தைகளுக்கு 15 மிலி அளவில் கொடுத்தாலே நல்ல பலனளிக்கும். ஒரு வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தக் குடிநீரை கொரோனா உள்ளிட்ட  தொற்று இல்லாத காலங்களில் அருந்த வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் காலையும், மாலையும் அருந்தலாம். நோய் வரும் முன் காக்க விரும்புவோர் தினமும் ஒருமுறை என 21 நாள்கள் அருந்தலாம். 

மூலிகைகள் ஒரு பார்வை! 

கபசுர குடிநீரில் உள்ள பெரும்பாலான மூலிகைகள் உடலின் உள்ள நோய்த்தொற்றை அழித்து உடலுக்கு எதிர்ப்பாற்றலை வழங்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ப்ராபர்டியை கொண்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் உடலை மேம்படுத்தவும், நோய்க்கிருமிகளுடன் போராடவும் பயன்படுத்தும் மருந்துகளில் இரத்த உறைவுக்கு எதிரான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதே காரணிகளை உடைய கிராம்பு கபசுர குடிநீரிலும் உள்ளது. 

தசைகளுக்கு வலிமை தரும் 5 உணவுகள் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க !!

நிலவேம்பும், நீர்முள்ளியும்! 

நம் முன்னோர்கள் சித்தமருத்துவத்தில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு ஆகியவற்றை சரி செய்ய நிலவேம்பை பயன்படுத்தினர். டெங்கு, கொரோனா போன்ற வைரஸ்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் நிலவேம்பு பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, நோய்த்தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள உதவும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிலவேம்பில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

நீர்முள்ளி எனும் மூலிகை உடலுக்கு உறுதியளிப்பதோடு, இரத்தசோகை உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. வைட்டமின் ஈ, புரதம், இரும்பு சத்து என இதில் மருத்துவ குணங்கள் ஏராளம். இதனை கபசுர குடிநீரில் சேர்ப்பதால் சிறுநீரக மண்டலம் மேம்பாடு அடைகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என்பதால் கபசுர குடிநீரை நீரிழிவு நோயாளிகளும் அருந்த முடியும். 

உண்மையில் கபசுர குடிநீரால் கொரோனாவை குணப்படுத்த முடியுமா..? முழு விவரம் வீடியோ..

இந்த கபசுர குடிநீர் கொரோனா போன்ற நோய்த்தொற்றுக்கு ஏற்றதாக இருந்தாலும், இதை 'நேரடி மருந்து' என இந்திய மருத்துவத்துறை இன்னும் பரிந்துரை செய்யவில்லை. நோயிலிருந்து தற்காத்து கொள்ள மட்டுமே கபசுர குடிநீரை அருந்தலாம் என தெரிவித்துள்ளது. கபசுர குடிநீரை நோய்த் தொற்றிலிருந்து காக்க உதவும் பானமாக கருதி அருந்தும்போது, சில பருவகால தொற்றை வரும் முன் தவிர்க்க முடியும் என்றே மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர். 

click me!