செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற காய்கறி இதுதான்..!!

By Asianet Tamil  |  First Published Mar 18, 2023, 10:28 AM IST

முட்டைக்கோஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதன்மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. முட்டைக்கோஸில் கலோரிகள் மிகக் குறைவு. அதனால் உடல் எடையை குறைக்க முயலுபவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.
 


காய்கறிகள் சாப்பிடுவது பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது. பொதுவாகவே இலை கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸ் இலை காய்கறிகளின் சூப்பர் ஹீரோ என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. 

முட்டைக்கோஸ் மிகவும் சத்துள்ள காய்கறி. வைட்டமின்கள் A, B2 மற்றும் C உடன், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் சல்பர் போன்றவை முட்டைக்கோஸில் உள்ளன.

Tap to resize

Latest Videos

 முட்டைக்கோஸ் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 100 கிராம் முட்டைகோஸில் 36.6 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. அதேபோல், முட்டைக்கோஸில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது மிகவும் ஏற்ற காய்கறியாகும். 

நார்ச்சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சாப்பிட்டால் பசியை கட்டுப்படுத்தலாம். முட்டைகோஸ் செரிமானத்திற்கும் நல்லது. முட்டைக்கோஸ் நார்ச்சத்து நிறைந்தது மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.முட்டைக்கோஸ் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. அவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. 

தொண்டை வலியை உடனடியாக போக்க உதவும் 5 உணவுகள்..!!

முட்டைக்கோஸ் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முட்டைகோஸில் உள்ள பொட்டாசியம் இதற்கு உதவுகிறது. இதேபோல், முட்டைக்கோஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை பெரிதளவு குறைக்கிறது. 
 

click me!