வாருங்கள்! சத்தான,சுவையான கொள்ளு உருண்டை காரக் குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் சாம்பார்,ரசம்,கூட்டு என்று செய்து அலுத்து விட்டதா? நாளைக்காவது ஏதேனும் புதுசா கொஞ்சம் டிஃபரெண்ட்டா ட்ரை செய்து தர வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான். இன்று நாம் அட்டகாசமான சுவையில் இருக்கும் கொள்ளுருண்டை காரக் குழம்பு ரெசிபியை தான் பார்க்க உள்ளோம்.
வழக்கமாக கடலை பருப்பு வைத்து தான் பருப்பு உருண்டை குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இன்று நாம் கொள்ளு வைத்து பருப்பு உருண்டை குழம்பு செய்ய உள்ளோம். இதனை ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். கொள்ளு,கருப்பு உளுந்து சேர்த்து செய்யப்படுவதால் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நமக்கு தரும்.
வாருங்கள்! சத்தான,சுவையான கொள்ளு உருண்டை காரக் குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 200 கிராம்
துவரம்பருப்பு – 4 ஸ்பூன்
கறுப்பு உளுந்து – 4 ஸ்பூன்
வர மிளகாய் – 6
புளி – லெமன் சைஸ்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பேபி கார்ன் பஜ்ஜி !
செய்முறை:
முதலில் கொள்ளு,கருப்பு உளுந்து,துவரம் பருப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் பருப்புகளை தண்ணீர் இல்லாமல் வடை கட்டி மிக்சி ஜாரில் சேர்த்து அதில் உப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்க்க வேண்டும். பின் அதனை நன்றாக கிளறி விட்டு அடுப்பில் இருந்துக் கொள்ள வேண்டும். கலவை நன்றாக ஆறிய பின், மாவினை எடுத்து ஒரே மாதிரியான அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன பௌலில் புளி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைசல் எடுத்து உப்பு மற்றும் சாம்பார் பொடி ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் செய்து வைத்துள்ள உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது வேக வைத்துள்ள உருண்டைகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் புளிக்கரைசல் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். குழம்பில் மசாலா வாசனை சென்ற பிறகு அதில் வேக வைத்துள்ள உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு கொதித்து கெட்டியாக மாறிய பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில் கொள்ளு உருண்டை காரக் குழம்பு ரெடி!