எண்ணெய் தேய்த்து குளித்தல் நம் பாரம்பரியத்தில் ஒன்று. ஆனால் இன்றைய தலைமுறையினர் மத்தியில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வரும் தீபாவளி அன்று சம்பிரதாயத்தின் படி எண்ணை தேய்த்து குளிக்கிறோம். எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் அவசியம்.இவ்வாறு குளித்தால் கோடி வெயிலில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
பொதுவாக நம் உடலில் அதிக வெப்பம் இருக்கும். இதனால் வெயில் காலங்களில் நம் உடலில் வியர்க்குருகள் கட்டிகள் அதிகம் வரும். இதிலிருந்து இதிலிருந்து விடுபட நல்எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
நல்லெண்ணெய் குளியல் நன்மை:
எண்ணெய் குளியலுக்கு உகந்தது நல்லெண்ணெய். எள்ளில் இருந்து பெறப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய். இந்த எண்ணெய்யில் அதிகமான புரதச்சத்து, துத்தநாகசத்து, தாமிரசத்து என பல வகையான சத்துக்கள் உள்ளன. இவை நம் சருமத்தை செழிப்பாக வைக்க உதவுகிறது.
நல்லெண்ணெய்யில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. எனவே இந்த எண்ணெயில் குளித்தால் எலும்புகள் பலம் பெறுகிறது. மேலும் உடலில் ஏற்படும் வலிகள், அசதிகள் போன்றவை இந்த நல்லெண்ணெய் குளியலால் மறைந்து, நமது உடல் புத்துணா்வு அடையச் செய்கிறது.
எண்ணெய் தேய்த்து குளிக்க சரியான நேரம் 5 மணி முதல் மாலை 7 வரை. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் என்னை தேய்த்து குளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை குளிக்க கூடாது.
இதையும் படிங்க:தீர்க்க முடியாத பிரச்சனையா? அப்போ உடனே இதை செய்யுங்க!
குறிப்பாக எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் மோர், தயிர், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சி தன்மை பொருட்களை உண்ணக்கூடாது.
வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் நோயின் தாக்கம் குறையும். மேலும் நம் தலை முடிக்கு தேவையான சத்துக்கள் நேரடியாக கிடைப்பதால் முடி நன்றாக வளரும். வறண்ட தோல் உள்ளவர்களுக்கு இந்த நல்லெண்ணெய் குளியல் ஒரு வரப்பிரசதமாக அமைகிறது.