ரம்ஜான் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரியாணி தான். அதுவும் பாய் வீட்டு பிரியாணி என்றால் விளக்க வார்த்தையே இல்லை. இந்த ரம்ஜான் நாளில் பாய் வீட்டு பிரியாணி எப்படி செய்வது என்பதை இங்கு காணலாம்..
பிரியாணி முஸ்லிம்களின் தனி அடையாளமாகவே உள்ளது. எனவே பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்முறை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - 1/4 கிலோ
கிலோ மட்டன் - 1கிலோ
பல்லாரி வெங்காயம் - 400 கிராம்
தக்காளி - 400 கிராம்
அரைத்த விழுது இஞ்சி - 75 கிராம்
அரைத்தவிழுது பூண்டு- 75 கிராம்
சிறிதளவு மல்லி இலை
தேவையான அளவு உப்பு
மிளகாய் தூள்1 1/2 ஸ்பூன்
பட்டை கிராம்பு ஏலக்காய் அரைத்த தூள் - 1 ஸ்பூன்
நெய் - 100 கிராம்
ஆயில் - 150 கிராம்
தயிர் - 1/2 லிட்டர்
எலுமிச்சைச் சாறு - 2 பழம்
பச்சை மிளகாய் - 15
தேவையான அளவு தண்ணீர்
இதையும் படிங்க: மாம்பழம் கூட இதையெல்லாம் சாப்பிட்டால் இவ்ளோ பிரச்சனைகளா!?
செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்து சூடேற்றி அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும். பின் அதனுடன் தேவையான அளவு பட்டை, லவங்கம், ஏலக்காய், அண்ணாச்சி பூ மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்கவும்.
நறுக்கி வைத்த வெங்காய மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை கிளறி விட வேண்டும். பின் இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விட வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள மட்டனை சேர்க்கவும். நன்கு வணக்கி விட்டபிறகு தேவையான அளவு தக்காளி மற்றும் உப்பும் சேர்க்கவும்.
இதனுடன் தேவையான அளவு கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் மற்றும் மல்லி இலை சேர்க்கவும். அதன் பின்னர் தேவையான அளவு தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாமாக சேர்ந்து மசாலா வாசனையுடன் நன்கு கொதித்து வரும் போது எடுத்து வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
பின் எலுமிச்சை சாறு சேர்த்தவுடன் நன்றாக பிரட்டி விட வேண்டும். உப்பு காரம் பார்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் நாம் தயாரித்து வைத்துள்ள பிரியாணி பாத்திரத்தின் மேல் தீக்கனல் களைப் போட்டு 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
இப்போது சுவையான பாய் வீட்டு மட்டன் பிரியாணி தயாராகிவிட்டது. வெங்காய ரைத்தா மற்றும் சிக்கன் கிரேவியுடன் பிரியாணி சாப்பிட்டால்
அடடா அருமை.