
Benefits of Eating Triphala Powder with Curd at Night : இப்போதெல்லாம் பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் வயிற்றுப் பிரச்சனைகள் வருவது பொதுவாகிவிட்டது. அதிக வேலைப்பளு காரணமாக சரியான நேரத்தில் உணவை முடியாமல் போகிறது இந்த இரண்டு விஷயங்கள் ஆளும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. நீண்ட காலமாக வயிறு சுத்தமாக இல்லை என்றால் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வயிற்றை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்றும், மலச்சிக்கலை போக்க வழிகள் ஏதேனும் உண்டா என்று நீங்கள் தேடுகிறீர்களா?
செரிமான அமைப்பு சரியாக செயல்படவில்லை என்றால் வாயு அஜீரணம் மலச்சிக்கல் போன்ற வயது தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் ஒரு எளிய வீட்டு வைத்திய மூலம் உங்களது வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்துவிடலாம். அதாவது இரவு நேரத்தில் தயிருடன் ஒரு பொடியை கலந்து சாப்பிட்டால் போதும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும், உங்களது செரிமான அமைப்பு பலப்படும் மற்றும் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படும்.
இதையும் படிங்க: மலச்சிக்கலால் சிரமமா? தினமும் இந்த பழத்தை '1' சாப்பிட்டால் நிவாரணம்
மலச்சிக்கல் பிரச்சனை நீங்க தயிரில் என்ன பொடி கலக்க வேண்டும்?
திரிபலா பொடியை தயிருடன் கலந்து சாப்பிட்டால் வயிறு நன்றாக சுத்தம் செய்யப்படும். திரிபாலா என்பது ஆயுர்வேதத்தில் ரொம்பவே பிரபலமான மூலிகையாகும். இந்த பொடியை தயிருடன் சாப்பிட்டு பல நன்மைகள் கிடைக்கும். இது செரிமான அமைப்பை மேம்படுத்தும், உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் சரும மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இதையும் படிங்க: மலச்சிக்கலா? சீரகத் தண்ணீரை இப்படி குடித்தால் வெறும் '5' நிமிடத்தில் நிவாரணம்
திரிபலா பொடியின் நன்மைகள் :
1. செரிமானத்தை மேம்படுத்தும் - திரிபலா பொடி ஒரு சிறந்த மலமிளகியாக செயல்படுகின்றது. இது செரிமானத்தை மேம்படுத்துவதிலும், குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. உடலின் நச்சுக்களை வெளியேற்றும் - திரிபலா பொடி உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் சுத்திகரிக்கவும் உதவுகிறது.
3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் - திரிபலா பொடிகள் இருக்கும் ஆன்டி-ஆக்ஸின்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
4. சருமம் மற்றும் முடிக்கு நல்லது - திரிபலா பொடி சரும மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முதுமையை தாமதப்படுத்தவும் உதவுகிறது.
5. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் - திரிபலா பொடி பக்கவாதம், இதயம் தொடர்பான பிற பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கும்.
6. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் - திரிபலா பொடி உடலில் குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்தும். எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது.
தயிர் நன்மைகள்:
1. புரோபயாடிக்குகள் - தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நல்ல செரிமானத்திற்கு உதவும்.
2. கால்சியம் - தயிரில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுவாக வைக்க உதவுகின்றது.
3. வைட்டமின்கள் - தயிரில் இருக்கும் வைட்டமின்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
இரவில் தயிரில் திரிபுலா பொடியை கலந்து சாப்பிடும் முறை :
ஒரு கிளாஸ் தயிரில் ஒரு ஸ்பூன் திரிபலா பொடி கலந்து இரவு தூங்கும் முன் சாப்பிட வேண்டும்.
முக்கிய குறிப்பு : திரிபலா பொடி அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு அஜீரணம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் சாப்பிடக்கூடாது.