கோடையில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கலாமா? அது நல்லதா!

By Ma riyaFirst Published Apr 21, 2023, 7:33 AM IST
Highlights

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனாலும் கோடையில் இந்த தண்ணீரை குடிக்கும்போது சில முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களை செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் சில பாதிப்புகள் ஏற்படும். 

இன்றைய காலக்கட்டத்தை பொறுத்தவரை வாழ்க்கைமுறை எல்லோருக்கும் கொஞ்சம் அவசரகதியில் தான் இருக்கிறது. துரித உணவுகள் பெருகிவிட்டன. இப்படி உணவு உண்ணும் முறையால் வயிற்றெரிச்சல் பிரச்சனையும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனை சரி செய்யவும் மக்கள் முயற்சி செய்கின்றனர். சிலர் வயிற்றுக் கோளாறுகளைப் போக்க செம்புப் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரைக் குடிப்பது சரியென்று நினைக்கின்றனர். ஆயுர்வேதத்தின் படி, செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீரை குடிப்பதால், கபம், வாத, பித்தம் ஆகிய பிரச்சனைகள் நீங்கும். கோடைகாலத்திலும் செம்பு பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீரை நாம் குடிக்கலாமா? ஆம் குடிக்கலாம். ஆனால் எந்த அளவு எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா? வாங்க பார்க்கலாம். 

செம்பு பாத்திர நீர் நன்மைகள்

காலையில் செம்பு பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை அருந்தினால், வயிற்றில் உள்ள குடலில் சேரும் அழுக்குகள் சுத்தமாகும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வாயு பிரச்சனைகள் குணமாகும். ஆனால் அல்சர் பிரச்சனை இருந்தால், கோடையில் இந்த தண்ணீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.  

செப்புப் பாத்திரத்தில் வைத்திருக்கும் நீர் குடித்தால், இரத்தத்தைச் சுத்திகரிக்கும். இந்த நீர் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதனால் மூட்டுவலி பிரச்சனையைத் தடுக்கிறது. இந்த தண்ணீரை குடிப்பதால் சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

கோடையில் செம்பு பாத்திர தண்ணீர்! 

கோடையில் நாள் முழுவதும் செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம். வயிற்றில் புண் இருப்பவர்கள் இந்த நீரை அருந்தக்கூடாது. நீங்கள் சிறுநீரகம் அல்லது இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த தண்ணீரை குடிப்பதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும். அசிடிட்டியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை தவறுதலாகக் கூட குடிக்கக் கூடாது. இதனால் பிரச்சனை அதிகரிக்கலாம். 

ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, செப்பு பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர், ஆற்றல் ஏற்றப்பட்ட நீர் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 7 முதல் 8 நாட்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருப்பதன் மூலம், அதனுடைய குணங்கள் தண்ணீருக்குள் வரும். இதன் காரணமாக, அந்த நீர் தானாகவே கொஞ்சம் வெப்பமடையத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் செம்புப் பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரைக் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அதிகமாகிவிடும். 

இதையும் படிங்க: தேங்காய் நார் வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாம்! இனிமேல் மறந்தும் தூக்கி போடாதீங்க! செம்ம டிப்ஸ்!!

click me!