
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் தான் காய்கறிகள். அந்தவகையில், பீட்ரூட்டில் வைட்டமின்கு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வாரி வழங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், தினமும் வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள் :
1. செரிமானத்தை மேம்படுத்தும் :
செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால் பல்வேறு நோய்கள் வருவதை தவிர்த்து விடலாம். எனவே மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளை தவிர்க்க தினமும் வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள்.
2. எடை இழப்புக்கு உதவும் :
பீட்ரூட் ஜூஸ் கொழுப்பை எரிக்கும் பண்பு கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள். இது செரிமானத்தை மேம்படுத்தி கலோரிகளை அதிகமாக எரிக்க உதவுகிறது.
3. இளமையாக வைக்க உதவும் :
பீட்ரூட் ஜூஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி சருமத்தில் இளமையாகவும், பளபளப்பாகவும் வைக்கவும், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் மருக்களை அகற்றவும் உதவுகின்றது.
4. மறதி வராது!
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்டுகள் மூளையை தூண்டி நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய் போன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம்.
5. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :
பீட்ரூட் ஜூஸ் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இது கொலஸ்ட்ராலை எரிக்கும் பண்பை கொண்டுள்ளன.
6. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது :
கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் சிறப்பாக செயல்பட பீட்ரூட் ஜூஸ் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் கல்லீரல் செல்கள் பாதிப்படைவதை தடுக்கவும், புதிய செல்கள் உருவாக உதவி செய்கிறது. எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது கண்டிப்பாக வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள்.
7. பிபி பிரச்சினைக்கு நல்லது :
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இரத்தக்குழாயில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவி செய்யும். அதுபோல குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் பிபி போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
8. இரத்த சோகை சரியாகும் :
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 போன்ற புதிய இரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அனீமியா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.
9. புற்று நோயை தடுக்கும் :
பீட்ரூட்டில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலில் புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பது மட்டுமல்லாமல், புற்றுநோய் வருவதற்கான காரணிகளை வேரோடு அழித்துவிடும்.
பீட்ரூட் ஜூஸ் தயாரிப்பது எப்படி?
ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, ஜூஸ் சாரில் போட்டு சாறு எடுக்கவும். பிறகு அதில் கொஞ்சமாக தண்ணீர் அல்லது பால் சேர்த்து குடிக்கவும். வாசனைக்கு ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
நினைவில் கொள் :
- சிலருக்கு வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் வாயு, அஜீரணம், உப்புசம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- அதுபோல அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்ள கூடாது. அது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவுக்கும். எனவே அளவோடு குடியுங்கள்.