Hand Wash : அடிக்கடி கை கழுவும் நபரா? இந்த பிரச்சினைகள் வரலாம்! ஜாக்கிரதை

Published : Oct 15, 2025, 01:01 PM IST
effects of excessive hand washing

சுருக்கம்

நீங்கள் அடிக்கடி கை கழுவுவதை பழக்கமாக வைத்துக் கொண்டால், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

நாம் சுகாதாரத்துடன் இருந்தால் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். அந்த வகையில் அவ்வப்போது கை கழுவுவது ஒரு நல்ல பழக்கமாக கருதப்பட்டாலும், இது அளவுக்கு அதிகமாக செய்தால் நம்முடைய சரீரத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கை கழுவுதல் :

கை கழுவுதல் என்பது பல தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு முக்கியமான பழக்கமாக கருதப்படுகிறது நம் சாப்பிடும் முன் மற்றும் பின், கழிவறைக்கு போயிட்டு வந்த பிறகு, வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் இப்படி பல சமயங்களில் கைகளை கழுவ வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றன.

மேலும் நம்முடைய கைகளானது தினமும் மொபைல் போன், கதவு, பணம், வாகனங்கள் ஆகியவற்றை தொடுகின்றன. இவற்றில் மில்கணக்கான கிருமிகள் இருக்கின்றன. எனவே, நாம் கைகளை கழுவாமல் இருந்தால் அந்த கிருமிகள் நம் உடலுக்கு நிழல் என்று பலவிதமான தொற்று நோய்களை ஏற்படுத்தி விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனாலும் கைகளை கழுவுதல் பழக்கம் அளவுக்கு அதிகமானால் அது தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே அதிகப்படியான கை கழுவுதல் பழக்கம் உங்களை நோய்வாய்படுத்துமா? அல்லது உடலில் எந்த மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இங்கு காணலாம்.

அடிக்கடி கைகளை கழுவுதல் :

அடிக்கடி கைகளை கழுவும் பழக்கம் உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது சில இயற்கை எண்ணெய் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் நம் சருமத்தில் உள்ளன. அவை தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க ஒரு பாதுகாப்பு கவசம் போல் செயல்படும். ஆனால் நாம் அடிக்கடி சோப்பு போட்டு அல்லது வெறும் தண்ணீரில் கைகளை கழுவும் போது இந்த பாதுகாப்பு கவசமானது படிப்படியாக தேய்ந்து போக தொடங்கும். இதன் காரணமாக தோல் வறண்டு உயிரற்றதாக மாறிவிடும். இதன் விளைவாக கைகளில் சிவத்தல், அரிப்பு, விரிசல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். அதே சமயம் சிலருக்கு அரிக்கும் தோலழற்சி போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும். இது தவிர வெடிப்பு ஏற்பட்ட சருமம் வழியாக பாக்டீரியாக்கள் எளிதில் உடலுக்குள் நுழைந்து தொற்று நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

எப்போது, எப்படி கைகளை கழுவ வேண்டும்?

- கைகளை கழுவுவது நல்லது என்றாலும் அதை தேவைப்படும் மட்டுமே கழுவ வேண்டும். உதாரணமாக கழிப்பறை பயன்படுத்திய பிறகு, சாப்பிடுவதற்கு முன்பு மற்றும் பிறகு, வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன், நோய்வாய்ப்பட்ட ஒருவரை தொட்ட பிறகு தும்மல் அல்லது இருமலுக்கு பிறகு, இது போன்ற சமயங்களில் கைகளை கழுவுவது மிகவும் அவசியம்.

- உங்களது கைகளை கழுவதற்கு சரியான வழி என்னவென்றால் சோப்பு போட்டு ஓடும் நேரில் குறைந்தது 20 வினாடிகள் கழுவ வேண்டும் முக்கியமாக விரல்களுக்கு இடையில், நகங்களில், கைகளில் பின்புறத்தில் நன்கு தேய்க்க மறக்காதீர்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?