
காய்ச்சல், சளி ஆகியவை இருக்கு போது உடல் நம் பேச்சைக் கேட்காமல் நம்மை அவதிக்கு உள்ளாக்கும். அந்த மாதிரி சமயங்களில் இந்த உணவுகளைச் சாப்பிட்டல் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
1.. தூதுவளை வறுவல்
தூதுவளை இலைகளை (நான்கு அல்லது ஐந்து) நெய்யில் வதக்கி, ஒரு பிடிச் சோறுடன் பிசைந்து உண்ண வேண்டும். மாலை வேளையில் உண்ண வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
2.. சீரகத் தண்ணீர்
ஒரு சட்டித் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதே சூட்டில், சிறிய தேக்கரண்டி சீரகம், ஏழு மிளகுகள் போட்டு மூடி வைத்து விட வேண்டும்.
வெதுவெதுப்பான பதத்தில் பருகலாம். ஒவ்வொரு முறை பருகும்போதும் சன்னமாகச் சூடேற்றிக் கொள்வது நல்ல பலன் தரும்.
சூழல் சரியாகும் வரை, வழக்கமான குடிநீருக்குப் பதில் சீரகநீரை மட்டுமே பருகுவது மிகுந்த நற்பலனைத் தருகிறது.
செரிமானம் மேம்படவும், சளி வெளியேறவும், மூச்சுச் சிக்கல்களைச் சீர்செய்யவும் சீரக நீர் உதவியாக உள்ளது.