படர்தாமரைக்கு உடனடி நிவாரணம் அளிக்காவிட்டால், பிறகு அது உடலைச் சுற்றி படர்வதோடு, சருமம் தடிப்பாகவும் அரிக்க கூடியதுமாகவும் மாற்றி விடும்.
நமது உடலை பாதுகாக்கும் கவசமாக இருப்பது தோல். அதே போல மிக மென்மையான உறுப்பும் தோல் தான். சிலருக்கு தோலில் தொற்றுநோய்கள் ஏற்படுவது இயல்பானது தான். அதனைப் போக்குவதற்கு உடனடியாக சில வைத்தியங்களை மேற்கொள்ள வேண்டும். அதில் ஒன்று தான் படர்தாமரை. பொதுவாக படர்தாமரை என்பது தோலின் மீது ஏற்படும் தொற்று நோய் ஆகும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வரக் கூடியது. படர்தாமரைக்கு உடனடி நிவாரணம் அளிக்காவிட்டால், பிறகு அது உடலைச் சுற்றி படர்வதோடு, சருமம் தடிப்பாகவும் அரிக்க கூடியதுமாகவும் மாற்றி விடும்.
படர்தாமரை யாருக்கெல்லாம் வரும்?
undefined
ஃபங்கஸ் என அழைக்கப்படும் இந்த பூஞ்சைத் தொற்று நோய் ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது. அதாவது, அதிக உஷ்ணம் மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் சருமங்களில் இந்த தோல் நோய் உண்டாகிறது. அதாவது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாத நபர்களுக்கு, தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கு, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் உடலில் அதிகப்படியான வியர்வை வருபவர்களுக்கு இந்த படர்தாமரை மிக எளிதாக தொற்றிக் கொள்ளும்.
Tooth care: பல் அழகை பாதுகாக்கும் எளிய பாட்டி வைத்தியம் இதோ?
படர்தாமரைக்கான தீர்வு
பொதுவாக வேப்பிலையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வேப்பிலை மிகச் சிறந்த நிவாரணியாக உள்ளது. படார்தாமரையை குணமாக்குவதற்கு மிகச் சிறந்த தீர்வு ஒன்று உண்டு என்றால் அது வேப்பிலை தான். அதாவது, ஒரு கிளை வேப்பிலையை எடுத்துக் கொண்டு, அதனை நன்றாக கழுவி, உரலில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இது அதிக கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். பின்னர், சிறிதளவு கற்றாழை ஜெல்லை, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள வேப்பிலை பேஸ்டுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு, பச்சைக் கற்பூரத்தை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள். இதில் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சிறிதளவு மஞ்சள் தூளை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
படர்தாமரை அரிப்பு மற்றும் சொரியாசிஸ் உள்ள இடங்களில், நாம் தயாரித்து வைத்துள்ள வேப்பிலை பேஸ்ட்டை தடவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால், படர்தாமரை மற்றும் சொரியாசிஸ் போன்றவை இருக்கின்ற இடம் தெரியாமல் மறைந்து விடும்.