உப்பு போட்டு 'டீ' குடித்தால் இவ்வளவு நன்மைகளா? கெட்ட கொழுப்பு அப்படியே குறையும்!!

By Ma riya  |  First Published May 22, 2023, 6:45 PM IST

தேநீரில் உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம். 


உப்பு போட்டு டீ குடிப்பதை நினைத்தாலோ நீங்கள் முகம் சுளிக்கலாம். ஆனால் டீயில் உப்பு போடுவது அவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளது. அலட்சியம் செய்யாமல் பொறுமையாக படியுங்கள்.  உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்தியுங்கள். ஆம், சில வகையான தேநீரில் கருப்பு உப்பை சேர்த்து குடிக்கும் போது, ​​அது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். எந்தெந்த வகையான டீயில் கருப்பு உப்பைக் கலக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.  

கிரீன் டீ 

Tap to resize

Latest Videos

உடல் எடையை குறைக்க பரவலாக பயன்படுத்தப்படும் கிரீன் டீயுடன் கருப்பு உப்பைக் கலந்து குடியுங்கள். இதன் மூலம், உங்களுடைய செரிமான பண்புகளை அதிகரிக்கலாம். எடை குறைப்பு திட்டத்தை கடைபிடிப்பவர்களுக்கு உப்பு சேர்த்து குடிக்கும் கிரீன் டீ அஜீரணம், அமிலத்தன்மை ஆகிய பல வயிற்றுப் பிரச்சனைகளை குறைக்கும். 

லெமன் டீ

எலுமிச்சை கலந்த தேநீரில் கருப்பு உப்பு சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. நீங்கள் லெமன் டீயில் கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.  வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். குடல் இயக்கத்தின் வேகம்  துரிதப்படுத்துகிறது. இதன் மூலம், எதைச் சாப்பிட்டாலும் வேகமாக ஜீரணிக்க செய்யும் ஆற்றல் குடலுக்கு கிடைக்கும். இதனால் வயிறு சுத்தமாகிறது.  உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். 

இதையும் படிங்க: அடிக்கடி கடல்பாசியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

பிளாக் டீ 

பால் சேர்க்காத பிளாக் டீயில் கருப்பு உப்பு கலந்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு உதவும். முக்கியமாக இது எடை இழப்பை துரிதப்படுத்தும். கருப்பு உப்பின் சிறப்பே, வயிற்றில் செரிமான நொதிகளை ஊக்குவிப்பது தான்.  இதனால் உணவு வேகமாக செரிமானம் ஆகும். கெட்ட கொழுப்பு குறையும். உடல் பருமனை குறைக்க உதவுகிறது. 

இதையும் படிங்க: கருப்பு கவுனி அரிசியில் உள்ள நன்மைகள்!!

click me!