Food
அந்தோசயனின், ஃபிளாவனாய்டு போன்ற தாவர நிறமிகள் காரணமாக இது கருப்பு அல்லது ஊதா நிறத்தில் காணப்படுகிறது.
நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கருப்பு அரிசியில் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகள் உண்ண ஏற்றது.
சிவப்பு, பிரவுன், வெள்ளை அரிசியை விட சத்துக்கள் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி.
வெள்ளை அல்லது பழுப்பு அரிசிக்கு பதில் கருப்பு அரிசியை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
ஒருவர் கொலஸ்ட்ராலைக் குறைக்காமல் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. கருப்பு அரிசியை சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
கருப்பு அரிசி உண்பதால் மலச்சிக்கல், வாயு போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு உதவும்.
தினமும் ஒருவேளை கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
வெள்ளை அரிசியை ஒப்பிட்டால் கருப்பு கவுனி அரிசியில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.
கருப்பு அரிசியில் உள்ள ஆந்தோசைனின் உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும். மூளை செயல்திறன் மேம்படும்.
கருப்பு கவுனி அரிசியில் ஈயம், ஆர்சனிக், காட்மியம் மாதிரியான கன உலோகங்கள் உள்ளதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது. மருத்துவர் பரிந்துரையுடன் அளவாக எடுத்து கொள்ளுங்கள்.