பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை இங்கு விரிவாக பார்க்கலாம்.
பாலியல் உறவுகளில் அதிகம் ஈடுபடுவோருக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) அதிகம் பரவுகிறது. சில நேரங்கள் தொற்று பாதித்தவருடன் உடலுறவு கொள்வதும் காரணமாக அமைகிறது. உடலுறவில் ஈடுபடும் போது சோர்வாக இருப்பது கூட பாலியல் நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் நோய்களின் அறிகுறிகளை இங்கு காணலாம்.
ஈஸ்ட் தொற்று
அந்தரங்க உறுப்பில் சங்கடமான உணர்வு ஏற்படும். ஈஸ்ட் தொற்று வந்த பெண்களுக்கு இப்படி உணர்வு வரலாம். டிரிகோமோனியாசிஸ் போன்ற பாலியல் நோய்களும் ஈஸ்ட் தொற்றை உண்டாக்கலாம். பல பாலியல் துணைகளை கொண்டவர்களுக்கு இந்த நோய் வரலாம். உடலுறவின் போது ஆணுறைகளை பயன்படுத்தாவிட்டால் இந்நோய் பரவும்.
இடுப்பு வலி
கிளமிடியா, கோனேரியா ஆகியல் நோய்கள் பயங்கர இடுப்பு வலியை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்த்தொற்றுகள் பிறப்புறுப்பை பாதிக்கும். கருப்பை, ஃபலோபியன் குழாய்களிலும் பரவி கடுமையான இடுப்பு வலியை ஏற்படுத்தும். சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால் இந்த நோய் கருப்பை, ஃபலோபியன் குழாய்களில் இடுப்பு அழற்சி நோய் (PID) ஆபத்தை அதிகரிக்கும்.
ரத்தப்போக்கு
அரிப்பு, சிவத்தல், வீக்கம், இடுப்பு வலி அல்லது துர்நாற்றம் போன்றவை பாலியல் தொற்று காரணமாக வரலாம். இதனுடன் இரத்தப்போக்கு இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள். அசாதாரண ரத்தப்போக்குடன், வீக்கமும் ஏற்படும். இது பாக்டீரியா உங்கள் இனப்பெருக்க பாதையை பாதித்ததால் உண்டாகும் அறிகுறி.
இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் இதை அனுபவிச்சிருக்கீங்களா?
புண்கள்
மனித பாப்பிலோமா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் புண்கள், மருக்கள் போன்றவை வரும். இந்த வைரஸ் பாதிப்பு பிறப்புறுப்பு மருக்களை ஏற்படுத்தும். இந்த மருக்கள் தட்டையாகவும், சமதளமாகவும், பார்க்க காலிஃபிளவர் போலவும் இருக்கும். சில நேரம் இவை பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். சிறிய சிவப்பு கொப்புளங்கள் வரலாம்.
கருப்பை வாய்
மாதவிடாய் இல்லாதபோதும் இரத்தப்போக்கு அல்லது உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு வருவது பாலியல் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) கருப்பை வாயைப் பாதிக்கலாம். இதுவே உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கை ஏற்படுத்தும்.
பாலியல் தொற்றால் ஏற்படும் அழற்சி இனப்பெருக்க பாதையில் பாதிப்பை உண்டாக்கும். பிறப்புறுப்பின் சவ்வுகளை எரிச்சலடையச் செய்து, இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். இது மாதவிடாய் காலத்தில் அதிகளவு இரத்தம் வெளியேறுவது போல இல்லாமல் துளி துளியாக இருக்கும்.
இதையும் படிங்க: ஆண்கள் ரொம்ப நல்லவங்களா இருந்தாலுமே.. இந்த 3 காரணத்துக்காக அவங்க துணை பிரிய வாய்ப்பு இருக்கு!