மணமேடையில் இருந்து மணமகளை கீழே தள்ளிய மணமகன்! இப்படியும் ஒரு காரணமா? மாப்பிள்ளைக்கு தெரிந்த உண்மை!

By Ma riya  |  First Published May 15, 2023, 1:57 PM IST

வரதட்சணை கொடுக்காததால் மணமக்களுக்குள் பிரச்சனை.. மணமேடையில் இருந்து மணமகளை கீழே தள்ளிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. 


இந்தியாவில் வரதட்சணை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த பழக்கம் இன்றளவு நடைமுறையில் உள்ளது. கார், பைக், ரொக்கப் பணம் என மணமகன் வீட்டார் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர். இங்கு கொஞ்சம் வினோதமாக, மணமகன் ஒருவர் தாங்கள் கேட்ட வரதட்சணையை மணமகள் தரப்பில் கொடுக்காததால் மணமகளை மண்டபத்தில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் மணமகனின் வித்தியாசமான நடத்தையால் திருமண பந்தம் மணமடையில் வைத்தே முறிந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கன்னுஜ் மாவட்டத்தில் மணமேடையில் மணமகன் ஒருவர் மணப்பெண்ணை சரமாறியாக அடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவளை மேடையில் இருந்து கீழே தள்ளியுள்ளார். வரதட்சணையாக ஏர் கண்டிஷனர் கொடுக்க மணப்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதிக்காததால் மணமகன் மிகவும் விரக்தியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆத்திரத்தில், விழாவின் போது மணமகளை திருமண மேடையில் இருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

Latest Videos

வரதட்சணை விவகாரத்தில் மணமகன் வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து , மணமகன், மணமகள் தரப்பு இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. இருவீட்டாரும் சண்டையிடவே விவாதம் விவகாரமானது. இந்த சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த பல விருந்தினர்கள் காயமடைந்தனர். மணமகன் கேட்ட வரதட்சணை கொடுக்கப்படாததால் ஏற்பட்ட பிரச்சனையை சுமுகமாக முடிக்க மணமகள் வீட்டாரை சமாதானப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் மணமகள் வீட்டார் திருப்தி அடையாததால் திருமணத்தை ரத்து செய்தனர். 

இதையும் படிங்க: கோடையில் ரொமான்ஸ்.. ஆனா படுக்கையில் இந்த விஷயத்துல கவனம் இருக்கணும்! மறந்தால் அவ்ளோ தான்!!

திருமணம் நின்றுபோன நிலையில், மணமகன், அவரது உறவினர்கள் மணமகள் இல்லாமல் வீடு திரும்பினர். தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் திருமணம் மே 11ஆம் தேதி அன்று எட்டாவாவைச் சேர்ந்த இளைஞருடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரதட்சணையாக ஏர் கண்டிஷனர் கொடுக்க மணமகளின் குடும்பத்தினர் மறுத்தது, மணமகனுக்குத் தெரியாது. அதுவரை திருமணம் சுமூகமாக நடந்து வந்தது. வரதட்சணையாக ஏர் கண்டிஷனர் தரப்படுவதில்லை என்பதை அறிந்து மாப்பிள்ளை கோபமடைந்தார். கோபத்தில், மணமகளை மேடையில் இருந்து தள்ளிவிட்டார். மேடையில் இருந்து விழுந்த மணப்பெண் சுயநினைவை இழந்தார் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப் பெற்றுள்ளதாகவும், இரு வீட்டாரும் சமரசம் செய்து திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இதையும் படிங்க: இந்த 3 வெள்ளை உணவுகளில் இருந்து விலகி இருந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறையும்!

click me!