வீடு சின்னதா இருக்கு.. இங்க எப்படி வாழ? திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. அடுத்து நடந்த சம்பவம் தெரியுமா?

By Ma riya  |  First Published May 10, 2023, 4:41 PM IST

கேரளாவில் சீட்டு போட்ட வீட்டைப் பார்த்த பின்னர், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திருமணம் என்பது புனிதமான பந்தமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் திருமணத்தில் மணமகன், மணமகளின் சந்திப்புக்கோ, உரையாடலுக்கோ பெரிதாக வாய்ப்பு இருக்காது. பெண் பார்க்கும் படலம் முடிந்த சில நாட்களில் திருமணமும் முடிந்துவிடும். ஆனால் இப்போது அப்படியல்ல. திருமணம் முடிவான பிறகு தம்பதிகள் தங்களை குறித்து அறிந்து கொள்ள தொடங்குகின்றனர். இதனால் சிலர் திருமணம் நெருங்கும்போது காதலர்களாக மாறிவிடுகின்றனர். சிலர் திருமணம் பாதியில் நின்றுவிடுகிறது. 

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகும் திருமணங்கள் ரத்து செய்யப்படுவது சகஜமாகிவிட்டது. திருமண மண்டபத்தில் தாலி கட்டிய பிறகும் தம்பதிகள் பிரிய நேருகிறது. இதற்கு வினோதமான பல காரணங்கள் கூறப்படுகின்றன. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளத்தில் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

திருமணத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஒரு புதுப்பெண் தன் கணவன் வீட்டிற்கு செல்லும்போது, அவள் விரக்தியின் உச்சத்திற்கு சென்றது தான் அதற்கு காரணம். தன் கணவரின் வீடு கான்கிரீட் போடாத சீட் கூரை கொண்ட வீடு என்பது அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது. அந்த சின்னஞ்சிறிய ஷீட் வீட்டில் தனி அறை கூட இல்லை என்பது கூடுதல் வருத்தம். இதனால் அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டு மணப்பெண் திரும்பி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் அவளது உறவினர்கள் அவரை சமாதானம் செய்து, அவருடைய விருப்பத்திற்கு மாறாக மீண்டும் கணவன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். 

இதையும் படிங்க: தினமும் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகள்!!

விஷயம் இதுதான். அந்த பெண்ணின் கணவர் தினக்கூலி தொழிலாளி. இவருக்கு சொந்தமாக ஐந்து சென்ட் நிலத்தில் ஷீட் போட்ட வீடு தான் உள்ளது. ஆனால் இந்த வீட்டில் தனக்கு குறைந்தபட்ச தனியுரிமை (privacy) கூட இல்லை என மணப்பெண் கூறியுள்ளார். இந்த திருமண உறவு வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மணமகளின் தந்தை, தாயிடம் உறவினர்கள் இதுகுறித்து பேசினர். அவர்களது மகளை வற்புறுத்தச் சொல்லியிருக்கின்றனர். ஆனால் பலரும் சொன்னபோதும் மணமகள் சம்மதிக்கவில்லை. 

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மணமகள் வீட்டாருக்கும், மணமகன் வீட்டாருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியது. நிலைமை கட்டுக்குள் வராததை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வந்த பின்னரும் மணமகள் தன் முடிவில் உறுதியாக இருந்தார். மீண்டும் மணமகன் வீட்டிற்கு செல்ல மறுத்து விட்டார். பின்னர் இந்த திருமண உறவை முறித்து கொள்ள முடிவு செய்தனர். 

இதையும் படிங்க: செல்லப்பிராணிக்கு கிஸ் கொடுக்க புடிக்குமா? அதனால் ஏற்படும் பாதிப்புகள்

click me!