குளிர்காலம் துவங்கிவிட்டால் குதிகால் வெடிப்பு பிரச்னையும் பின்னாடியே வந்துவிடும்- என்ன செய்யலாம்..??

By Dinesh TGFirst Published Oct 10, 2022, 9:57 PM IST
Highlights

இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழைப் பொழிவு துவங்கிவிட்டது. இதையடுத்து பனிக்காலம் ஆரம்பமாகும். இன்னும் மழை வராத பல இடங்களில் இப்போதே குளிர் படுத்தி எடுக்கிறது. பொதுவாக பனி காலங்களில் உடல் உழைப்பால் ஈடுபடுவோர் பலருக்கு குதிகால் வெடிப்பு அதிகரிக்கும். எதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாகவும் இந்த பிரச்னை வரலாம். இது ஏற்படுவதற்கு வேறு சில காரணங்களுக்கும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அழகு நிலையம் முதல் மருத்துவமனை வரை குதிகால் வெடிப்பை சரி செய்வதற்கு எண்ணற்ற சிகிச்சை முறைகள் உள்ளன. எனினும், இது பலருக்கும் நிரந்தர தீர்வை வழங்குவது கிடையாது. ஆனால் இயற்கையான முறைப்படி இதை சரிசெய்ய முடியும் என்று பலரும் கூறுகின்றனர். அந்த வகையில் நாம் அன்றாடம் செய்யக்கூடிய சில நடைமுறைகளை வைத்து குதிகால் வெடிப்பு பிரச்னைக்கான தீர்வுகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. 
 

குதிகால் வெடிப்பு ஏன் ஏற்படுகிறது?

பெரும்பாலும் இந்த பிரச்னையை அதிகம் பெண்களே எதிர்கொள்கின்றனர். குதிகால் வெடிப்பு ஏற்படுகையில் நமக்கு வலி ஏற்படுகிறது. அது அப்படியே வளர்ச்சி அடைந்து செல்லுலாய்டிஸை உண்டாக்குகிறது. நமது உடல் அதிக அழுத்தம் கொடுத்து நடக்கும் போது, சருமம் தடித்து குதிகால் வெடிப்பை உண்டாக்குகிறது. இதனால் ஏற்படும் பிளவுகள் இன்னும் ஆழமாக போகும் பட்சத்தில், அது வலியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

நீண்ட நேரம் நிற்பவர்கள், வெறுங்காலில் நடந்து கொண்டே இருப்பவர்கள், காலநிலை மாற்றத்துக்கு எதிர்வினை செய்யக்கூடிய உணர்திறன் கொண்ட சருமத்தை கொண்டவர்கள் உள்ளிட்ட காரணங்களால் குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது. அதுவும் அதிக உணர்திறன் சருமம் கொண்டவர்களுக்கு கடினமான சோப்புகளை பயன்படுத்தும் போது தோல் வறண்டு போய்விடும். அதேபோல குளிர்ச்சியான காலநிலையின் போதும் சருமம் வறண்டுவிடும். 

எந்த வயதில் இருந்து முகத்துக்கு ஃபேஷியல் செய்ய துவங்கலாம்..??

உடல்நலமில்லை என்றாலும் குதிகால் வெடிப்பு தோன்றுமா?

ஆம், தோன்றும் என்பது தான் பதி. உடல் பருமன் கொண்டவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எக்ஸிமா பிரச்னை, ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு கொண்டவர்கள், தட்டையான பாதங்களை கொண்டவர்கள் உள்ளிட்டோருக்கும் குதிங்காலில் வெடிப்பு ஏற்படும். இவர்களைப் போன்றோர் கால்களை முடிந்தவரையில் ஈரமாக வைத்திருக்க முயற்சிக்கலாம். காலுறைகளை போட்டுக்கொண்டு வேலை செய்வது நல்ல தீர்வை தரும்.

மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறி- காது வழியாகவும் கேட்கலாம்..!!

தேன் இயற்கையான மாய்ஸ்சரை- தெரியுமா உங்களுக்கு?

தேனியில் நிறைய ஆன்டி மைக்ரோபியல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. அதனால் குதிகால் வெடிப்பிலுள்ள காயத்தை சீக்கரமாக இது குணப்படுத்திவிடும். மேலும் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க முட்யும். வெதுவெதுப்பான நீர் தேன் சேர்த்து பாதங்களை நனைப்பதன் மூலம் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கிறது. குறைந்தது தினமும் கால்களை நன்றாக சுத்தம் செய்து தேன் கலந்த தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்து வந்தால், பாதங்கள் மென்மையாக மாறிவிடும்.

குதிகால் வெடிப்புக்கு ஆலிவ் எண்ணெய் பயன் தருமா?

மற்ற எண்ணெய்களை விடவும், குதிகால் வெடிப்புக்கு ஆல்வி எண்ணெய் நல்ல பலன் தரும் தன்மையுடன் உள்ளது. இது சருமத்தை மென்மையாகவும் மிருந்துவாகவும் வைத்திருக்கும். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கால்களுக்கு நன்றாக தேய்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதையடுத்து ஒரு மணிநேரம் ஊற வைத்துவிட்டு பாதங்களை நன்றாக சோப் போட்டு கழுவிடுங்கள். ஈரமின்றி கால்களை நன்றாக துடைத்துவிட்டு, காலுறைகளை மாட்டிக் கொண்டு உங்களுடைய அன்றாட பணிகளை செய்யுங்கள். இது உடனடி பலன் தரும்

click me!