உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும் 3 வகை உணவுகள்..!!

Published : Feb 04, 2023, 01:46 PM IST
உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும்  3 வகை உணவுகள்..!!

சுருக்கம்

எடை குறைப்பது போலவே, எடை அதிகரிப்பதும் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. கண்டதையும் தின்று உடல் எடையை கூட்டுவதை விடவும், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க முயல்வதே நன்மையாகும்.  

வெள்ளை சக்கரை சேர்க்கப்பட்ட துரித உணவுகள், பேஸ்ட்ரி இனிப்புகள், பிஸ்கட்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை அளவுக்கு மீறி உட்கொண்டு வந்தால், விரைவாகவே உடல் எடை அதிகரித்துவிடும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்து உணவுகளும் உயர் கலோரியை கொண்டவையாகும். இதற்கு காரணம், குறிப்பிட்ட உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சக்கரை குறைவாக இருப்பது தான். இது உடல் எடையை அதிகரிப்பது மட்டுமின்றி, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளையும் உருவாக்கிடும் தன்மை கொண்டவையாகும்.

இதனால் முடிந்தவரை வெள்ளை சக்கரையால் செய்யப்பட்டு, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது. ஆனால் இதுபோன்ற உணவுகளால் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு கூடுதல் நோய் பாதிப்பு தான் ஏற்படும். இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது போன்று, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்கவும் வழிகள் உள்ளன. அதுகுறித்து பார்க்கலாம். 

அவகேடோ

ஆரோக்கியமான வகையில் எடையை பெறுவதற்கு, உங்களுடைய தினசரி உணவில் நிறைய வெண்ணெய் பழம் என்கிற அவகேடோவை சாப்பிடுங்கள். இது உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டு வந்து சேர்க்கும். மேலும் சருமம் பொலிவு பெறும். ஒருநாளைக்கு அதிகப்பட்சமாக பாதி அவகெடோவை சாப்பிடலாம். அவகேடோவை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும், பல்வேறு காய்கறிகள் மற்றும் மிளகு உப்பு சேர்த்து, சாலட்டாக சமைத்து சாப்பிடலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள் விரைவான எடை அதிகரிப்புக்கு உதவியாக இருக்கும். இது உங்கள் உடலுக்கு கூடுதல் கலோரிகளை வழங்கும். உருளைக் கிழங்கு கொண்டு சமைக்கப்படும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கலாம். மேலும் இது உங்களுடைய தசைக்கு கிளைகோஜன் சேமிப்பையும் அதிகரிக்கிறது.

பீநெட் பட்டர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பரவல் தான் பீநெட் பட்டர். இதை பிரெட், பன் போன்றவற்றின் மீது ஸ்பிரெட் செய்ய வேண்டும். அதனால் இதை தமிழில் பரவல் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் மோனோ- மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இடம்பெற்றுள்ளன. உடல் எடையை அதிகரிக்க ஆரோக்கியமான வழியை மாற்றியமைக்க விரும்பும் நபர்களுக்கு தினசரி உணவில் வேர்க்கடலை வெண்ணெய் உட்கொள்வது நல்ல பலனை தரும். இதை தினமும் ஒரு துண்டு பிரெட்டுடன் சாப்பிடுபவருக்கு, அன்றைய நாளுக்கு தேவையான நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் புரதத்தைப் பெறுகிறார். 

ரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க இந்த ஒரு பழம் போதும்..!!

PREV
click me!

Recommended Stories

Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!
Winter Hair Fall : வெந்தயத்தை இப்படியும் யூஸ் பண்ணலாமா? குளிர்கால முடி உதிர்வைத் தடுக்க சூப்பர் வழி