அனாமத்தாக ரோட்டில் கிடந்த "Full Bottle".. ஆசையாக அள்ள வந்தவர்கள் அலறியடித்து நின்றது ஏன்? - வைரலாகும் வீடியோ!

By Ansgar R  |  First Published Sep 11, 2023, 5:09 PM IST

இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் அப்பொழுது வெளியாகும் சில Prank வீடியோக்கள் நம்மை கோவத்தின் உச்சிக்கு கொண்டு சென்று விடும். ஆனால் இது போன்ற சில Prank வீடியோக்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்க மறப்பதில்லை.


ஒரு முறை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதன் பிறகு அதை (மது பாட்டிலை) எங்கு கண்டாலும் அதை குடிக்க தயாராகி விடுகின்றனர். ரோட்டில், வீட்டில், விழாக்களில் என்று எங்க அந்த மதுபாட்டிகள் கிடைத்தாலும், நம் குடிமக்கள் உடனடியாக தயார் நிலைக்கு சென்று விடுகின்றனர். 

இந்நிலையில் இந்த மது மீது குடிமக்கள் கொண்ட மோகத்தை மனதில் வைத்து, இளைஞர்கள் குழு ஒன்று பொது இடத்தில் வித்தியாசமான பரிசோதனை ஒன்றை செய்து அந்த தருணத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, காண்பவர்களை வயிறு குலுங்க சத்தமாக சிரிக்க வைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஏறாத ரயிலுக்கு தினமும் டிக்கெட் வாங்கும் கிராம மக்கள்! தயாள்பூர் ரயில் நிலையத்தின் சுவாரஸ்யமான கதை!

பொது இடங்களில் கீழே பணத்தைக் கண்டால், அதை எடுத்து யாருடைய கண்ணிலும் படாமல், பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அங்கிருந்து பலர் நகர்ந்து செல்வதை நான் சில சமயங்களில் பார்த்திருப்போம். ஆனால், சாலையோரத்தில் மதுபானம் கிடப்பதைக் கண்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்று இளைஞர்கள் குழு ஒன்று இந்தப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. 

ஹர்ஷசாய் என்ற நபர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.. வீடியோவில் காணப்படுவது போல், அந்த மதுபானத்தின் பாட்டிலில் கயிறு கட்டப்பட்டுள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள் அனைவரும் சாலையில் கிடந்த மதுபாட்டில்களை எடுக்க முயல்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக வந்து மது பாட்டிலை எடுக்க முயற்சிக்கின்றனர். 

 

வந்தவர்கள் மது பாட்டிலில் கை வைத்தவுடன், தூரத்தில் ஒளிந்து நின்ற இளைஞர் குழுவினர் பாட்டிலில் கட்டியிருந்த கயிற்றை பிடித்து இழுத்துவிடுகின்றனர். ஆகவே ஆசை ஆசையாக பாட்டிலை எடுக்க வந்த மதுபிரியர்கள், அது சட்டென்று அங்கிருந்து நகர்வதை கண்டு அதிர்ச்சி அடையும் காட்சிகள் அந்த காணொளியில் பதிவாகியள்ளது. 

இந்த படத்தில் முதலில் நீங்கள் பார்த்தது எது? உங்கள் ஆளுமை இப்படி தான் இருக்கும்..

click me!