உடலுறவுக்கு வலுசேர்க்கும் பழங்கள் மற்றும் உணவுகள்.. இது எப்படி எல்லாம் உதவும்? - முழு விவரம்!

By Asianet Tamil  |  First Published Sep 9, 2023, 11:59 PM IST

போதிய இடைவெளியில் வைத்துக் கொள்ளப்படும் ஆரோக்கியமான உடல் உறவு ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மனு ரீதியாகவும் என்னென்ன நன்மைகளை தரும் என்பதை நாம் பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த ஆரோக்கியமான உடல் உறவுக்கு உதவும் உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.


பொதுவாக உடலுறவு கொள்வதற்கு முன்பாக சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டிய அதே நேரத்தில் சில வகை உணவுகளை உட்கொள்வதினால் ஆண்களுக்கு விறைப்பு தன்மையும், பெண்களுக்கு உடல் ரீதியாக சில வலுவையும் கொடுக்கவல்லது. அந்த சில உணவுகளையும், பழங்களையும் பற்றி பின்வருமாறு காணலாம்.

தர்பூசணி பழங்கள், இந்த பழத்தில் உள்ள நற்குணங்கள் ரத்தக்குழாய்களை தளர்வுபடுத்தி ஆணுறுப்புக்கு ரத்தம் பாய்ச்சும் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலுறவுக்கு முன்பு ஆண்கள் தர்பூசணி பழங்களை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய ஆணுறுப்புக்கு அதிக பலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

உடலுறவு முடிந்ததும் தம்பதியன் சிந்தனை இப்படியெல்லாம் இருக்குமா? புரிந்து நடந்துகொண்டால் நல்லாருக்கும்!

சாக்லேட்டுகள், குறிப்பாக டார்க் சாக்லேட்டுகளில் பிளவனால்ஸ் என்ற பொருள் அதிகம் இருப்பதனால் இது உங்கள் உடல் முழுக்க ரத்த ஓட்டத்தை சீராக அமைகிறது. அதே நேரத்தில் சாக்லேட்டுகளை உண்பதால் அதிக கலோரிகள் உங்கள் உடம்பில் ஏறும் நிலையில் அது உங்களை உடலுறவில் சிறந்த முறையில் ஈடுபடவும் உதவி செய்கிறது. அதே நேரத்தில் அதிக அளவுகளை சாக்லேட்டுகளை உட்கொள்வதால் உடல் எடையை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மீன் மற்றும் பருப்பு வகைகள், பொதுவாகவே மீன்களை உண்ணும் மக்களிடம் விட்டமின் டி சக்தி அதிகளவில் இருக்கும். இது உங்கள் உடலுறவை மேம்படுத்தும் சத்துக்களில் ஒன்றாகும். அதேபோல பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு ஆகிய இரண்டு பருப்புகளும் உடல் பலத்தை அதிகரித்து உங்களை அதிக நேரம் உடலுறவில் ஈடுபட வழிவகை செய்கிறது.

ஒருமுறை 'இந்த' மாதிரி உங்க துணைக்கு முத்தம் கொடுத்து தான் பாருங்களே...முத்ததில் ஒளிந்திருக்கும் ரகசியம்.!!

click me!