உடலுறவு முடிந்ததும் தம்பதியன் சிந்தனை இப்படியெல்லாம் இருக்குமா? புரிந்து நடந்துகொண்டால் நல்லாருக்கும்!

By Asianet Tamil  |  First Published Sep 8, 2023, 11:08 PM IST

சரியான கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் உடலுறவு என்பது எந்த அளவிற்கு மனிதனின் உடலுக்கும், மனதிற்கும் நன்மை தரும் என்பதை நாம் பல பதிவுகளில் பார்த்திருப்போம். ஆனால் உடல் உறவு முடிந்த பிறகு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு எண்ணங்கள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? சரி அதில் என்ன இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 


உடலுறவுக்குப் பிறகு பலர், பலவிதமாக நடந்துகொள்வார்கள், சிலர் சிறிது நேரம் தங்களுடைய துணையின் அரவணைப்பில் நேரம் செலவிட விரும்புவார்கள். மற்றும் சிலர் உடலுறவுக்குப் பிறகு தங்கள் துணையுடன் முத்தமிட்டு, கொஞ்சி விளையாட நினைப்பார்கள். அதே நேரத்தில் ஒரு சிலர் அந்த இடத்தை விட்டு விரைவாக வேறு அறைக்கு போக வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் உடலுறவு முடிந்ததும் கும்பகர்ணனாக மருத்துவர்களும் உண்டு. 

சரி இதில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் கேட்பது சரிதான், உடலுறவின் பொது நீங்கள் உங்கள் துணையுடன் எந்த அளவிற்கு ஒத்துழைக்கின்றீர்களோ அதே அளவிற்கு அது முடிந்த பிறகும் அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக ஆண்கள், உடலுறவு முடிந்தபிறகு தங்கள் மனைவியின் விருப்பம் போல நடந்துகொள்வது நல்லது. 

Tap to resize

Latest Videos

undefined

உடல் உறவுகள் தொடர்பான சில  கட்டுக்கதைகள் இருக்கு தெரியுமா? அவற்றை ஒருபோதும் நம்பாதீங்க..!!

ஒரு வேலை நீங்கள் உடனே அந்த அறையை விட்டு வெளியேறி வேறு அறையில் ஓய்வெடுக்க நினைத்தால், அது உங்கள் மனைவிக்கு பிடிக்கிறதா என்று முதலில் சோதித்து பாருங்கள். அது அவர்களுது பிடிக்காத பட்சத்தில் அதை கொஞ்சம் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது. பெண்களுக்கு ஆண்களின் மனமறிந்து நடந்தால் நன்றாக இருக்கும். 

உடலுறவில் ஈடுபடும்போது மட்டுமல்லலால் அது முடிந்தபிறகும் இதுபோன்று ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருக்க வேண்டும் என்று தான் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது ஒரு உடலுறவால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாக்குகிறது.

உடலுறவுக்கு முன் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? தெரிஞ்சுக்க இதை படிங்க..

click me!