கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து உறங்கவில்லை எனில் அது உறவில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமணமான புதிதில் கணவன் - மனைவி இடையே இருக்கும் அன்பு, பாசம், நெருக்கமும் அன்னோன்யமும் சில ஆண்டுகளுக்கு பின் இருப்பதில்லை. காலப்போக்கில் இவை அனைத்து மங்கி விடுகிறது. திருமணமாகி ஒரு மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் வரை தான் தம்பதிகள் ஒருவரையொருவர் அணைத்து கொண்டு உறங்குவார்கள். குழந்தைகள் பிறந்த பின் பல தம்பதிகள் சேர்ந்து உறங்குவதில்லை. சிலர் குழந்தைகளுடனும் சிலர் குழந்தை கணவருடன் சேர்ந்து உறங்குவார்கள். ஆனால் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து உறங்கவில்லை எனில் அது உறவில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நெருக்கம் குறையும்
ஒரு நாள் முழுவதும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அன்றைய நாளின் முடிவில் இருவரும் மனம் விட்டு பேசுவது முக்கியம். அதற்கு சிறந்த நேரம் என்றால் படுக்கையறை நேரம் தான். தங்கள் உறவை வலுப்படுத்த தம்பதிகள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தம்பதிகள் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து இருப்பது கணவன் மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.
Relationship Tips: மழைக்காலத்தில் மனதோடு நெருக்கம்; உறவோடு நெருப்பு விளையாட்டு; ரொமான்ஸ் டிப்ஸ்!!
சலிப்பு உணர்வு
எந்த ஒரு உறவிலும் ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகமும் ஆர்வமும் நீண்ட காலம் நீடிப்பதில்லை. திருமண உறவுக்கும் இது பொருந்தும். எனவே படுக்கை அறையில் இருவரும் ஒன்றாக உறங்கவில்லை அந்த உறவு எளிதில் சலித்துவிடும். ஒருக்கட்டத்தில் உங்கள் துணை உங்களை ஆசையாக தொட்டால் உங்கள் பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது. ஒருவித சலிப்பு உணர்வே ஏற்படும்.
உடலுறவில் விருப்பம் இருக்காது
ஒரு தம்பதி தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், அந்த தம்பதிக்கு உடலுறவில் கூட அவ்வளவு பெரிதாக விருப்பமில்லாமல் போய்விடும். திருமண உறவில் ஒருவித வெறுமை உணர்வு ஏற்படும்.
முத்தம் கொடுப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறிவியல் பூர்வ உண்மைகள் இதோ..
திருமணத்தை மீறிய உறவு
தம்பதிகளிடையே நெருக்கம் குறைவதால், அது எங்கே கிடைக்கிறதோ அங்கு தான் உங்கள் துணையும் செல்வார்கள். அதாவது யார் அவர்கள் மீது அன்புடன் இருக்கிறார்களோ அவர்கள் வலையில் எளிதாக உங்கள் துணை விழக்கூடும். இதனால் திருமணத்தை மீறிய உறவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் தங்கள் துணையுடன் நேரம் செலவிட கூட சிலர் விரும்பமாட்டார்கள்.
விரிசல் அதிகரிக்கும்
தம்பதிகளிடையே விரிசல் அதிகரிக்கும் போது உறவில் மகிழ்ச்சி குறைந்துக் கொண்டே போகும். உறவில் சந்தேகம் என்று வந்துவிட்டால் அவ்வளவு தான் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு தான் வரும். ஆனால் தம்பதிகளிடையே விளையாட்டு, தீண்டல்கள் ஆகியவை இல்லாமல் போகும். இதனால் தான் தம்பதிகளிடையே அடிக்கடி சண்டைகள், வீண் விவாதங்கள் ஆகியவை ஏற்படும். இதே நிலை தொடர்ந்தால் அந்த உறவில் வெறுப்பு மட்டுமே மிஞ்சும்.