Relationship Tips: மழைகாலத்தில் மாலை நேரத்தில் திடீரென வரும் மழையால் உடல் நனைந்து நடுக்கம் தொடங்கி விடும். குளிர் நடுக்கத்தை குறைக்க வீட்டில் துணையோடு அமர்ந்து பேசிக்கொண்டே காதல் விளையாட்டில் ஈடுபட உற்சாகம் அதிகரிக்கும். எத்தனையோ விளையாட்டுக்கள் இருந்தாலும் மழை காலத்தில் மெல்லிய நடுக்கத்தை போக்க வாழ்க்கை துணையோடு காதலோடு விளையாட உங்களுக்கு சில ரொமான்ஸ் ரகசியங்களை தருகிறோம்.
காதல் விளையாட்டுகள்:
கடுமையான வேலைப்பளு உள்ள இந்த காலத்தில் 2k கிட்ஸ்களுக்கு காதலை கொண்டாட துணையோடு சந்தோஷிக்க இப்போதெல்லாம் நேரமே இருப்பதில்லை. கிடைக்கும் தருணத்திலும் துணையுடன் உற்சாகமாக நேரத்தை செலவழிக்க முடிவதில்லை. கையில் மொபைல் போன் அல்லது லேப் டாப் உடன் அமர்ந்து விடுவதால் துணையோடு கொஞ்சி பேச பலருக்கும் நேரமில்லை. எல்லாமே அவசரகதியில் நடப்பதால் மகிழ்ச்சியான தருணங்களை மனதில் அசைபோட முடிவதில்லை. மன்மதன் அம்பு பாயும் நேரத்தில் மனதிற்கு பிடித்த துணையோடு நேரத்தை செலவு செய்ய என்னென்ன விளையாட்டுக்கள் விளையாடலாம் என்று படித்து பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.
அந்தி மாலை நேரத்து காதல்:
காதலிக்க நல்ல இடம் அமைவது அவசியம். யாருடைய தொந்தரவு இருக்கக் கூடாது. மனதை மயக்கும் அந்தி மாலை நேரத்தில் மனதிற்கு பிடித்த உடையை அணிந்து கொண்டு மெலிதாய் குளிர்காற்று வீச மொட்டை மாடியில் துணையுடன் கை கோர்த்து பேசிக்கொண்டிருக்கலாம். சில்லென்று பெய்யும் மழையில் ஜில்லென்று நனைந்து கொண்டே காதல் மொழிகளை பேசுவதால் ரொமான்ஸ் அதிகரிக்கும். காதலிக்க நேரமில்லை என்று சொல்லித்திரிந்தாலும் வாடிய மலரை தண்ணீர் ஊற்றி புத்துணர்ச்சியூட்டுவது போல ரொமான்ஸ் ஆன பேச்சுக்கள் மூலம் துணையை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
காதல் திருமணம் பண்ண போறீங்களா? இதை செய்தால் உங்க பெற்றோரை ஈஸியா சம்மதிக்க வைக்கலாம்!!
தொட்டால் பூ மலரும்:
ஸ்பரிசங்கள்தான் காதலை சொல்லும் முதல் வழி. உங்கள் துணையை தொட்டு பேசுவதன் மூலம் உடலில் மின்சாரத்தை பாய்ச்சலாம். அந்த வோல்டேஜ் மூலம் காதல் முத்தங்கள் பரிசாக கிடைக்கும். கண்களால் காதல் மொழிகளை பேசி விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துங்கள்.
மழைக்கால விளையாட்டு
காதல் விளையாட்டுக்களில் கைகளுக்கு அதிகம் வேலை கொடுங்கள். மழைகாலத்தில் கை கோர்த்துக்கொண்டு பேசுவது, சிறு உரசல்கள், தொடுகைகள் லவ் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்யும். உடம்பில் ஆக்ஸிடோசின் அளவு அதிகரித்தால் ஆட்டோமேட்டிக்காக காதலும் அதிகரிக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
சர்ப்ரைஸ் பரிசுகள் அவசியம்
மனதிற்குப் பிடித்த உணவுகளை சமைத்து வைத்து கேண்டில் லைட் வெளிச்சத்தில் துணையோடு அமர்ந்து சாப்பிடலாம். கணவனோ, மனைவியோ காதலிக்கும் தருணத்தில் அவரின் பேச்சுக்களையும், செய்கைகளையும் உற்சாகப்படுத்துங்கள். அந்த நேரத்தில் அவருக்கு பிடித்தமான பரிசுகளையும் சர்ப்ரைஸ் ஆக கொடுங்கள். அப்புறம் பாருங்கள் அன்றைய இரவு உங்களுக்கு மறக்கமுடியாத ரொமான்ஸ் இரவாக மாறிவிடும்.