Parenting Tips: புளூ பேபியா? அம்மாக்களே பயமோ பதற்றமோ வேண்டாம்.. என்ன செய்தால் காப்பாற்றலாம்?

By Asianet Tamil  |  First Published Jul 25, 2024, 12:19 PM IST

பிறக்கும் குழந்தைகள் பிங்க் நிறமாக இருந்தால்தான் ஆரோக்கியமான குழந்தை. அதுவே நீல நிறமாக மாறிவிட்டால் அது இதய குறைபாடு உடைய குழந்தை என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம். பிறந்த குழந்தை அழும்போது குழந்தையின் உதடுகள் மற்றும் கைகளில் நிறமாற்றம் என்பது வெளிப்படையாக தெரியும். குழந்தையின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உண்டாகும் போது தோல் இயல்பான நிறத்தை விட நீலம் அல்லது ஊதா நிறத்தில் மாறும்.


குழந்தைகளுக்கு குறைபாடு:
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரம் பேரில் 34 பேர் இறந்து விடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விபரம். இதில் பத்து சதவிகிதக் குழந்தைகள் பிறவி இதயக்குறைபாட்டினால் பிறக்கிறார்களாம். 3 சதவிகித குழந்தைகள் தீவிர இதய குறைபாட்டுடன் பிறக்கின்றனராம்.
குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறக்கும் குழந்தைகள் பிங்க் நிறமாக இருந்தால்தான் ஆரோக்கியமான குழந்தை. அதுவே நீல நிறமாக மாறிவிட்டால் அது இதய குறைபாடு உடைய குழந்தை என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிக்கிறது.

ஆரோக்கியமான குழந்தை
குழந்தை பிறந்தவுடன் தோல், இளஞ்சிவப்பாக இருக்கும். ஒரு நிமிடத்துக்கு 100 முறை இதயம் துடிக்கும். சுவாசம் சீராக இருக்கும்.
இதெல்லாம் பிறந்த குழந்தைக்கான ஆரோக்கியமான குழந்தைக்கான அடையாளங்கள். குழந்தை பிறந்து சில  மணிநேரத்தில் நன்றாக கத்தி அழும். சில நாட்கள் வரை அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்கும். மலம் கழிக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமான அறிகுறி.

நீல நிறத்தில் மாறும் உடல்
குழந்தையின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கார்பன் டை ஆக்ஸைடு அதிகமானால் உடல் நீலநிறமாகிவிடும். இதயத்தில் குறைபாடு இருந்தால் இத்தகைய பாதிப்பு வரும். இதயத்தில் ஒட்டையுடன் உள்ள குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை சிகிச்சை மூலம் எளிதில் காப்பாற்றலாம்.  இரண்டாவது சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ் எனப்படும் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் உடல் நீல நிறத்தில் மாறும். குழந்தைகளின் இதயத்துடிப்பில் வித்தியாசமான ஒலி, அடிக்கடி சளி பிடிப்பது, நிமோனியா தாக்குவது, எடை குறைவாக இருப்பது, குறைவாக பால் குடிப்பது, அடிக்கடி மயக்கம், நினைவிழத்தல், கை, கால் வீக்கம் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சையை தொடங்குவது அவசியம்.

முத்தம் கொடுப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறிவியல் பூர்வ உண்மைகள் இதோ..

புளூ பேபி
இந்தியாவில்  பிறக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் சிலர் நீல நிற குழந்தையாகப் பிறக்கின்றனர். இந்த குறைபாடுள்ள குழந்தைகள் எல்லோருமே மரணமடைவதில்லை. 50 சதவிகித குழந்தைகள் முறையான சிகிச்சை கிடைத்து உயிர் வாழ்கின்றனர். மீதி குழந்தைகள் இறந்து விடுகின்றனர். இதய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் குழந்தைகளின் உடல் நீல நிறமாக மாறும். இது இதய மருத்துவத்தில் "சயனாட்டிக்' எனப்படும். இது போன்ற குழந்தைகள் புளூ பேபி என்று அழைக்கப்படுவர்.

புளூ பேபியாக மாற என்ன காரணம்?
இதய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் குழந்தைகளின் உடல் நீல நிறமாக மாறும். இது இதய மருத்துவத்தில் சயனாட்டிக் எனப்படும். இதயத்திற்கு வரும் அசுத்த ரத்தத்தை சுத்தப்படுத்தி அதனை பிற பகுதிகளுக்கு பம்ப் செய்து அனுப்புவது இதயத்தின் வேலை. இதில் கோளாறு ஏற்பட்டால்தான் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பமாக இருக்கும் போது அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டாலும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும் குழந்தையை பாதிக்கும்.  ரூபெல்லா தடுப்பூசி போடாமல் விடுவதும் குழந்தையை பாதிக்கும். மரபணுக்குறைபாடு, பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் இது தாக்கும்.

Tap to resize

Latest Videos

அடியாத்தி!!கல்யாணத்துக்கு அப்புறம் கணவன் மனைவிக்கு நடுவுல காதல் வராததற்கு இப்படியும் 1 காரணமா?
மரபணு குறைபாடு:
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மரபணு குறைபாடு இருக்கிறதா என்று முதலிலேயே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் முறையாக சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த வேண்டும். பிறந்த குழந்தைகள் தாய்பால் குடிக்கும் போது பாதிப்பு ஏற்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, அதிக வியர்வை ஏற்பட்டாலோ இதய சிகிச்சை மருத்துவரிடம் சிசிச்சைக்கு அழைத்து செல்வது அவசியம்.

ஹீமோகுளோபின்:
கருவிலேயே குழந்தையின் இதய குறைபாடு கண்டறியப்பட்டால் அதை அபார்சன் செய்யவே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதே நேரத்தில் பிறந்த பின்னர் ப்ளூ பேபி குறைபாடு கண்டறியப்பட்டால் பரிசோதனை மூலம் குழந்தையில் இதய குறைபாட்டினை அறிந்து கொண்டு சிகிச்சையை தொடங்கலாம். உடலில் ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவும் சிகிச்சையை தொடங்க வேண்டும். அதே போல ரத்தத்தில் அளவில் ஆக்சிஜனை அதிகரிக்கும் வகையில் தூய்மையான இடத்தில் வைத்து குழந்தையை பராமரிக்க வேண்டும். தண்ணீர் சத்து சமநிலையில் இருக்க வேண்டும். நோய் தொற்று பாதிக்காத அளவிற்கு குழந்தையை பாதுகாப்பாக பெற்றோர்கள் பராமரிக்க வேண்டும். இந்த ஆலோசனைகளை பெற்றோர்கள் சரியாக பின்பற்றினாலே குழந்தையை காப்பாற்றலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

click me!