ஒன்றாக பப்ஜி விளையாடிய டெல்லியைச் சேர்ந்த சச்சினுக்கும் பாகிஸ்தான் நாட்டுப் பெண் சீமா ஹைதருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இந்த மே மாதம், 27 வயதான பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், தனது நான்கு குழந்தைகளுடன் கராச்சியிலிருந்து புறப்பட்டார். அவர்கள் துபாய்க்கு ஒரு விமானத்திலும், காத்மாண்டுவுக்கு இணைக்கும் விமானத்திலும் சென்றனர்.
நேபாள தலைநகரில் இருந்து அவர்கள் பொக்ராவுக்குச் ஒரு பேருந்தில் சென்றுள்ளனர். சோதனைகள் இருந்தபோதிலும், அவர்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லையைக் கடக்க முடிந்தது. நான்கு குழந்தைகளுடன் பயணம் செய்த பெண்ண மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை.
டெல்லியில் அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுராவில் வசிக்கும் 22 வயது மளிகைக் கடை தொழிலாளியான சச்சினைத் தேடி இந்தப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் 2020 இல் கோவிட் தொற்று காலத்தில் PUBG விளையாடும்போது ஒருவரை ஒருவர் முதலில் அறிமுகம் செய்துகொண்டிருக்கின்றனர்.
அவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்தனர், ஆனால் ஒரு வழக்கறிஞர் ஹைதரைப் பற்றி போலீஸுக்குத் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவில் உள்ள பல்லப்கர் செல்லும் வழியில் இருவரும் பிடிபட்டனர். போலீசாரின் விசாரணையில் பாகிஸ்தான் பெண்ணின் பின்னணி தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சீமா ஹைதர், மே மூன்றாவது வாரத்தில் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். மேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக சச்சினுடன் தங்கியிருக்கிறார். அங்கு அவர் இருவரும் சட்டபூர்வமாக திருமணம் செய்துகொள்வது குறித்து உள்ளூர் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.
அந்த வழக்கறிஞர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தான் பெண் கைதாகியுள்ளார். "அவரும் அவரது குழந்தைகளும் (மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன்) பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பதைக் கண்டு நான் திடுக்கிட்டேன். இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் செயல்முறை குறித்து விசாரித்துக்கொண்டிருந்தார். சச்சினை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவர் கூறினார்" என்கிறார் வழக்கறிஞர்.
விளம்பரத்துக்கு எவ்ளோ செலவு பண்றீங்க... நிதி இல்லை என்ற டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
சீமா ஹைதர் பாகிஸ்தானில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் பாதிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். சவுதி அரேபியாவில் பணிபுரியும் ஒரு பாகிஸ்தானியரைத் திருமணம் செய்துகொண்டதாகவும், அவர் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் அவரை அடிப்பதாகவும் சொன்ன அந்தப் பெண் நான்கு வருடங்களாக அவரைச் சந்திக்கவில்லை எனவும் கூறி இருக்கிறார். தன் சகோதரன் பாகிஸ்தான் ராணுவத்தில் இருப்பதாகவும் வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.
ஹைதரும் சச்சினும் ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவின் பல்லப்கருக்குச் செல்லும் பேருந்தில் கைது செய்யப்பட்டு, நொய்டாவுக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்டனர். விசாரணையின்போது, அந்தப் பெண் சிந்து மாகாணத்தில் உள்ள கைர்பூரில் இருக்கும் தனது பெற்றோரின் வீட்டை ரூ.12 லட்சத்திற்கு விற்று சச்சினை திருமணம் செய்து கொள்ள இந்தியா வந்ததாகச் சொல்லி இருக்கிறார்.
சச்சின் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சீமா ஹைதரைத் தங்க வைத்துள்ளார். வீட்டு உரிமையாளரிடம் சீமாவை தனது மனைவி என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார். சீமா கைது செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் தூதரகத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்புகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன. மே 15 மற்றும் 20 க்கு இடையில் சீமா ஹைதர் இந்தியாவுக்கு வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
மக்கள் நலனுக்காக பெண் முதலையை திருமணம் செய்துகொண்ட மெக்சிகோ மேயர்