ஆண்குறி சிறியதாக இருப்பதாக நினைத்து கவலைப்படும் ஆண்களே, பெண்கள் சொல்வதை கேளுங்கள்..!!

Published : Dec 03, 2022, 10:31 AM IST
ஆண்குறி  சிறியதாக இருப்பதாக நினைத்து கவலைப்படும் ஆண்களே, பெண்கள் சொல்வதை கேளுங்கள்..!!

சுருக்கம்

ஆபாசப் படங்களை பார்த்துவிட்டு, ஆண் உறுப்பு சிறியதாக இருப்பதாக பல ஆண்கள் கவலைப்படுவதுண்டு. இதனால் தன்னுடைய பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என்கிற தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் சென்றுவிடுகின்றனர்.  

ஆண்களில் பலருக்கும் தன்னுடைய உறுப்பு சிறியதாக இருப்பதாக குழப்பம் உள்ளது. இதற்கு காரணம் ஆபாசப் படங்கள் தான். பாலியல் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேசும் சமூகம் நாம் கிடையாது. இதனால் பலரும் தவறான தகவல்கள் மற்றும் வழிநடத்தல் காரணமாக, குழப்பமான முடிவுகளுக்கு சென்றுவிடுகின்றனர். இதில் ஆண்களின் பாடு தான் திண்டாட்டம் நிறைந்தது. பெண்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை சக பெண்கள் அல்லது தாயாருடன் பேசி தெளிவுப் பெறுவது உண்டு. ஆனால் ஆண்களின் நிலைபாடு அப்படி கிடையாது. பாலியல் தொடர்பாக பிரச்னை இருந்தாலும், அவர்கள் தங்களுக்குள் தான் வைத்துக்கொள்கின்றனர். ஒருவேளை பிரச்னை இல்லாவிட்டாலும், ஆபாசப் படங்கள் பார்த்து தங்களுக்குள் தேவையில்லாத சந்தேகங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இதில் பலருக்கும் கவலையாக இருப்பது, தங்களுடைய ஆண்குறியை நினைத்து தான். பல ஆண்களுக்கு ஆண்குறி சிறியதாக இருந்தால் தங்களுடைய பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என்கிற தாழ்வு மனப்பான்மை உள்ளது. அதுகுறித்த உண்மையை நிலையை பார்க்கலாம்.

காரணம் இதுதான்

இதுபோன்று ஆண்களுக்கு ஏற்படும் கவலைக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆபாசப் படங்கள் தான். உண்மையாக சொல்ல வேண்டுமானால், பாலியல் உறவுக்கும் ஆண்குறியின் அளவுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அதேசமயத்தில் ஒருவேளை உடல் எடை கூடி இருந்தால், ஆண்குறியின் அளவு பாதி மட்டுமே வெளியில் தெரியும். இதன்காரணமாகவும் பல ஆண்கள், தங்களுடைய ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என்று கவலைக்கொள்கின்றனர்.

சுய இன்பம் ஆரோக்கியமானது

எந்தவொரு ஆரோக்கியமான ஆணும் பெண்ணும் சுய இன்பம் காண்பது இயற்கையானது தான். அதில் தவறேதும் கிடையாது. அதேபோன்று சுய இன்பம் காண்பது தீமையான செயல் கிடையாது என்பதையும் நினைவில் கொள்க. சுய இன்பத்தில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு அவர்களுக்கு பிறப்புறுப்பு சிறுத்துப் போகாது. அதேபோன்று அது பெரியதாகவும் வளராது. அதனா சுய இன்பம் குறித்து தவறான கற்பதிங்களை மருத்துவர்கள் இல்லாமல் யாரு சொன்னாலும் கேட்க வேண்டாம்.

உறுப்பு சிறியதுக்கு இது காரணமாகலாம்

ஹார்மோன் குறைபாடு காரணமாக உறுப்பு சிறியதாக இருக்கலாம். இதுபோன்ற பிரச்னை அரிதிலும் அரிதானவர்களுக்கு தான் ஏற்படுகிறது. அந்த வகையில் எவ்வளவு அளவுக்கு உறுப்பு சிறித்துப் போயிருந்தால், அது சிறியது என்பதை மருத்துவர் தான் முடிவு செய்ய வேண்டும். தனிநபர்கள், துறைசார்ந்த வல்லுநர்கள் இல்லாதவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம். ஆனால் இந்த பிரச்னைக்கு அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண முடியும்.

உடலின் இந்த பகுதிகளில் கொழுப்பு சேர விட்றாதீங்க..!! அப்பறம் வருத்தப்படுவீங்க..!!

மனைவி சொல்வதை கேளுங்கள்

உங்களுடைய உறுப்பின் அளவு குறித்து, உங்களுடைய மனைவியோ அல்லது காதலியோ எதுவும் சொல்லவில்லை என்றால், நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. தாம்பத்திய உறவில் பெண்களுக்கு திருப்தி ஏற்பட்டாலே போதுமானது. உடலுறவின் போது அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றால், உங்களுடைய ஆண்குறியின் அளவு தொடர்பாக உங்களது கவலையை தூக்கி எறிந்துவிடுங்கள்.

பெண்களின் கருத்து இதுதான்

ஆண்குறி தொடர்பாக பெண்களிடம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பெண்கள் யாரும் உறவின் போது, ஆண்களின் பிறப்புறுப்பை பார்ப்பது கிடையாது. குறிப்பாக  அதனுடைய அளவு குறித்து யாரும் கவலைப்படுவதும் கிடையாது. சுய இன்பம் செய்வதால் எந்த பாதிப்பும் வராது. அதனால் ஆண்குறி அளவைக் குறித்து ஆண்கள் யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

PREV
click me!

Recommended Stories

Relationship Tips : கள்ளக்காதல் செய்யுற ஆண்களை எப்படி கண்டுபிடிக்கனும்? மனைவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய '5' பாடங்கள்
Relationship Tips : ஆண்களே! மனைவியோட டார்ச்சர் தாங்கலயா? இந்த 5 விஷயங்களை பண்ற ஆளா நீங்க? செக் பண்ணுங்க!!