ஆண்களுக்கு ஏற்படும் முக்கிய பாலியல் பிரச்சனைகளில் ஒன்று விறைப்புத்தன்மை. இதற்கு சில அடிப்படையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தீர்வை பெறலாம்.
விறைப்புத்தன்மை என்பது ஆண்களுக்கு ஏற்படும் முக்கியமான பாலியல் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இதனால் ஆண்களுக்கு உடல்நலனை விடவும் மனநலனை தான் பெரிதும் பாதிக்கப்படுகிறது. படுக்கையறையில் ஏற்படும் குற்ற உணர்வு, ஒரு மனிதனின் நம்பிக்கையை முற்றிலுமாக பாதிக்கச் செய்துவிடுகிறது. இதையடுத்து வாழ்க்கை மீது அவனுக்கு ஒரு ஆர்வமின்மை ஏற்பட்டுவிடும் மற்றும் மேலும் அவன், தன்னை வேண்டியவர்களிடம் இருந்து அந்நியப்படுத்திக் கொள்வான். வயதுக்கு ஏற்ப விறைப்புத்தன்மை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒருவேளை வயதானவுடன் பிரச்னை ஏற்பட்டால், அது இயற்கையான மாற்றமாகும். ஒருவேளை இளம் வயதிலேயே இப்பிரச்னை இருந்தால், உடனடி சிகிச்சை அவசியம்.
குடிப்பழக்கம், புகைப்பழக்கம்
undefined
ஆண்களிடம் ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்னைக்கு முக்கிய காரணிகளாக இருப்பது குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை ஆகும். இவை இரண்டும் நோய்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது. அதேபோன்று விறைப்புத்தன்மை பிரச்னை மட்டுமின்றி, இதனால் ஆண் மலட்டுத்தன்மையும் ஏற்படுத்திவிடுகிறது. அதனால் புகைப்பழக்கத்தையும் குடிப்பழக்க்கத்தையும் உடனடியாக விட்டுவிட முயற்சி செய்யுங்கள். அது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.
உடற்பயிற்சி அவசியம்
விறைப்பு பிரச்சனைகளுக்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நல்ல தீர்வாகும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. அதிகப்படியான உடல் பருமன் மற்றும் உடல் சோர்வு போன்றவற்றால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை ஏற்படலாம். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதன் மூலம், ஓரளவுக்கு தீர்வு காண முடியும். விறைப்பு ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதனால் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வதை கட்டாயமாக பின்பற்றுங்கள்.
தம்பதிகள் நிர்வாணமாக தூங்குவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!!
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
அதிக எடை ஒரு காரணமாக இருக்கும்போது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட மறக்காதீர்கள். ஆரோக்கியமற்ற உணவுகள் பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதனால் முடிந்தவரை ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கொண்டிருப்பது மிகவும் நல்லது. ஆண் ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. நட்ஸ், விதைகள், தர்பூசணி, முருங்கை, பெருங்காயம் இவை அனைத்தும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு நல்ல மருந்தாகும்.
இளைஞர்கள் கவனத்துக்கு
விறைப்புத்தன்மை பிரச்னை வயது முதிர்ந்தவர்களுக்கு தான் ஏற்படும் என்று கிடையாது. பெரும்பான்மையான இளைஞர்களும் இதனால் பாதிக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உணவுப் பழக்கவழக்கம், மது-புகை பழக்கம். இதையடுத்து ரத்த ஓட்டம் குறைவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. விறைப்புச் செயலிழப்பை செயற்கையான வழிமுறைகளை நாடாமல் இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம். விறைப்புச் செயலிழப்பைக் குணப்படுத்த நான்கு அடிப்படை விஷயங்கள் உள்ளன. இவற்றில் கவனம் செலுத்தினால், ஆபத்தான மருந்துகளைப் பயன்படுத்தாமலேயே பிரச்னைக்கு தீர்வுக்கு காணலாம்.