Benefits of Masturbation : சுயஇன்பம் அவ்வளவு மோசமானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல மன மற்றும் உடல் ரீதியான நலன்களைக் கொண்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பெண்கள் சுயஇன்பம் செய்யும்போது கண்டிப்பாக சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.இந்த சுயஇன்பம் உங்களுக்கு உடல் மகிழ்ச்சியை தருவது மட்டுமின்றி உங்கள் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும்.
சுயஇன்பம் மன அழுத்தத்தை குறைக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது. இது பெண்ணுறுப்பின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. ஆனால் அதை தவறாக செய்தால், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது பெண்கள் சுயஇன்பம் செய்யும் போது நினைவில்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வர இதுதான் காரணம்..! இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது தெரியுமா..?
தூய்மை முக்கியம்
உங்களைத் தொடுவதற்கு முன், உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் விரல்கள் பல பாக்டீரியாக்களின் தாயகமாகும். அவற்றை சுத்தம் செய்யாதது உங்கள் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே சுயஇன்பத்தில் ஈடுபடும் முன் கைகளை நன்கு கழுவுங்கள்.
நகங்கள் ஆபத்தானவை
உங்கள் நகங்கள் நீளமாக இருந்தால், உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் நகங்கள் பல வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் தாயகமாகும். மேலும் சுயஇன்பத்தின் போது உங்கள் விரல்களைப் பயன்படுத்தினால், இந்த வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உங்கள் பெண்ணுறுப்புக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
இரசாயனங்கள் தவிர்க்கவும்
அழகுசாதனப் பொருட்களில் உள்ள இரசாயனங்கள் உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. நீங்கள் சுயஇன்பத்திற்காக உங்கள் கைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதற்கு முன் எந்த கிரீம் அல்லது மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்த வேண்டாம். மாய்ஸ்சரைசரில் பாராபென் உள்ளது. இது உங்கள் பெண்ணுறுப்பின் pH சமநிலையையும் சீர்குலைக்கலாம். அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
பெண்களுக்கு PCOS வரக்காரணம் என்ன..? அதற்கான சிறந்த உணவுகள் இவையே...