Washing Hands Before Sex : ஊடலில் ஈடுபாடும் முன், கணவனும் மனைவியும் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். இதில் ஒன்று உடலுறவுக்கு முன் கைகளை கழுவுவது. நிபுணர்களின் கூற்றுப்படி அதன் அவசியத்தை இந்த பதிவில் காணலாம்.
அன்றாட வாழ்வில், குறிப்பாக செக்ஸ் வாழ்க்கையில் தூய்மை என்பது ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண்ணுறுப்பு மற்றும் ஆணுறுப்பு சுகாதாரம் பற்றி சுகாதார நிபுணர்கள் அடிக்கடி வலியுறுத்துகின்றனர். பாதுகாப்பான பாலுணர்வைக் கடைப்பிடிப்பதில் கைகளின் சுகாதாரமும் ஒரு முக்கிய காரணியாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் உடலுறவுகொள்ளும் முன்பாக கூடலின்போது கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் தான் பாலியல் ஆசைகள் தூண்டப்படுகிறது. ஆனால் நீங்கள் அழுக்கு கைகளுடன் "ஃபோர்ப்ளேயில்" ஈடுபட்டால், நீங்கள் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். உண்மையில் உடலுறவுக்கு முன் ஏன் கைகளை கழுவ வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
அழுக்கு படிந்த கைகளில் பல வகையான பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உள்ளன. இவை உங்களை தொற்றுநோய்களுக்கு ஆளாக்குகின்றன. அதனால் உடலுறவுக்கு முன் ஆண் மற்றும் பெண் என்று இருபாலரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இதை உடலுறவுக்கு முன்பு உள்ள ஒரு வழக்கமாக மாற்றிக்கொள்வது நல்லது.
அழுக்கு கைகளால் பாக்டீரியா சிறுநீர் பாதையில் நுழையலாம். இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதனால் தான் ஊடலுக்கு முன் கைகளை கழுவ வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை செய்கிறீர்களா..? அந்த பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை..!
சில சமயங்களில் தம்பதிகள் பயன்படுத்தும் பாடி லோஷன்கள் அல்லது பிற அழகு சாதனப் பொருட்கள் உங்கள் கைகளில் வாசனை திரவியங்கள் அல்லது இரசாயனங்கள் போன்ற எச்சங்களை விட்டுச் செல்லும். அவை அந்தரங்க உறுப்புகளில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் இதுபோன்ற நேரங்களில் லேசான சோப்புடன் கைகளைக் கழுவ வேண்டும்.