கணவர் காசை கண்மூடித்தனமாக இறைக்கும் பெண்.. 1 நாள் ஷாப்பிங் செலவு மட்டும் ரூ.73 லட்சமாம்.. என்னதா வாங்குவார்?

By Ma riyaFirst Published May 27, 2023, 5:30 PM IST
Highlights

ஒரு நாளில் ஷாப்பிங் செய்ய மட்டும் கிட்டத்தட்ட 73 லட்ச ரூபாய் செலவு செய்யும் துபாய் பெண் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். 

ஷாப்பிங் என்றாலே ஆண்களுக்கு டென்ஷன் ஆரம்பமாகிறது. ஏனென்றால் மனைவியின் ஷாப்பிங் செலவுக்கு தங்களுடைய பாக்கெட்டில் கைவைப்பது தான் அதற்கு காரணம். இப்படி ஷாப்பிங்கும் பெண்களும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில், பல பெண்கள் ஷாப்பிங் செல்ல விருப்பப்படுவார்கள். திருமணமான பெண்களும் இதில் விதிவிலக்கில்லை. பணக்காரர்களில் சிலர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் வரை ஷாப்பிங் செய்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு பெண் ஒரு நாள் ஷாப்பிங்கிற்கு மட்டும் ரூ.73 லட்சம் செலவிடுகிறார். அடேங்கப்பா... ஆச்சரியமாக இருக்கிறதா? நம்புவது கடினம், ஆனால் அது உண்மைதான். 

சில பெண்கள் சிறிய தொகைக்கு ஷாப்பிங் செய்கிறார்கள். சில பெண்கள் ஷாப்பிங் செய்தால் ஆயிரக்கணக்கில் பில் வரும். இங்கு ஒரு பெண் லட்சக்கணக்கில் பில்லை நீட்டுகிறார். இவர் ஒரு நாளைக்கு ஷாப்பிங்-காக மட்டும் 73 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறார். துபாயில் வசிக்கும் இந்த பெண் தனது கணவரின் பணத்தை செலவழிப்பதாக டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. துபாயில் வசிக்கும் சௌதி என்ற பெண் ஒரே நாளில் ரூ.73 லட்சம் ஷாப்பிங் செய்கிறார். இவருடைய கணவர் ஜமால் தான் மொத்த பணத்தையும் கொடுக்கிறார். 

சௌதி தன் கணவரின் ஆதரவோடு ஆடம்பரமாக ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார். தன்னுடைய விடுமுறைகளில் விலையுயர்ந்த இடங்களுக்கான பயணங்களை மேற்கொண்டு புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடுகிறார். தான் துபாயைச் சேர்ந்த பணக்கார இல்லத்தரசியான சௌதிக்கு டிக்டாக், இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். ஜமால், சௌதி தம்பதி சொகுசு கார்களை அதிகம் விரும்புகின்றனர். இவருடைய கணவர் இவருக்கு இரண்டு கார்களை பரிசாக அளித்துள்ளார். 

இதையும் படிங்க: முதல் சந்திப்பிலே சரியான துணையை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த 4 விஷயங்கள் இருக்கா பாருங்க!!

இது குறித்து சௌதி கூறுகையில்,"எனக்கு டிசைனர் உடைகள், பைகள் மட்டுமே பிடிக்கும். நான் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். நான் ஒரு பயணத்திற்கு 14-15 லட்சம் ரூபாய் எளிதாக செலவிடுகிறேன்"என்றார். 

தன்னுடைய சமீபத்திய மாலத்தீவு பயணங்களுக்கு 12.78 லட்சம் செலவு செய்தாராம். இவரும் இவருடைய கணவரும் மாலத்தீவை மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு ஒரு தடவை லண்டன் செல்வார்களாம். அடுத்ததாக ஜப்பான் செல்ல ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். என்னமோ... ஷாப்பிங் செய்ய ரூ.73 லட்சம் ஓவர்னு தோனுதா? ஆனால் பணம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லையே! அவரவர் பணம்.. அவரவர் விருப்பம்!! 

இதையும் படிங்க: ஆறு மனைவிகளுடன் கொண்டாட்டமாக வாழும் ஆர்தர் ஓ உர்சோ!! பிட்னஸுக்கு என்ன பண்றாரு தெரியுமா?

click me!